குழந்தை பெற்றுக்கொள்வதை விட அவர்களை நோய் நொடியின்றி பேணிப் பாதுகாப்பதுதான் இன்றைய பெற்றோர்களுக்கு சிரமமான காரியம். பிறந்த 6 வது வாரம் முதல் 5 வயது வரை குறிப்பிட்ட கால இடைவெளியில் தடுப்பூசி போட வேண்டியது மிகவும் அவசியமானது. தடுப்பூசி போட வேண்டிய நாட்களை எப்படி நினைவில் வைத்துக்கொள்வது என்று ஏங்கித் தவித்த பெற்றோர்களுக்கு வரப்பிரசாதமாக வந்துள்ளது “ஹலோ வேக்சின்" எஸ்.எம். எஸ்.
மும்பையை அடிப்படையாக கொண்ட மைன்ட்ஸ்டார்ம் சாப்ட்வேர் கன்சல்டன்சி நிறுவனம் இதனை அறிமுகம் செய்துள்ளது. குழந்தையின் பெயரில் ஒரு கணக்கை தொடங்கி அவர்களின் பிறந்த நாள் தேதியை பதிவு செய்து விட்டால் போதும். குழந்தைக்குப் போட வேண்டிய தடுப்பூசியை ஒவ்வொரு முறையும் எஸ்.எம்.எஸ் மூலம் “ஹலோ வேக்சின் ”நினைவுபடுத்திவிடும்.
ஒவ்வொரு தடுப்பூசிக்கும் மூன்று முறை நினைவூட்டுகிறது ஹலோவேக்சின். தடுப்பூசியின் தேதி வருவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பிருந்தே குறுந்தகவல் அனுப்பிவைக்கப்படுகிறது. இந்த சேவை ஒருசில நிறுவனங்களுக்கு மட்டுமே தற்போது அளிக்கப்பட்டு வருகிறது. தனது நிறுவன ஊழியர்களுக்கும் இந்த சேவையை அளிக்க ஹலோ சாப்ட்வேர் நிறுவனம் முடிவு செய்துள்ளது. அந்தந்த ஏரியாவில் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் மூலம் நிகழ்ச்சிகளை நடத்தவும் ஹலோ வேசின் முடிவு செய்துள்ளது.
சேவைக்கட்டணம்: தடுப்பூசி சேவைக்காக 5 ஆண்டுகளுக்கு 10 கணக்குகளுக்கு 2000 ரூபாய் வசூல் செய்யப்படுகிறது. ஒரு கணக்கு 200 ரூபாய் மதிப்பு பெறுகிறது. ஆனால் 25 கணக்குகளுக்கு 4000 ஆயிரம் ரூபாயும், 50 கணக்குகளுக்கு 7500 ரூபாயும் சேவைக்கட்டணமாக வசூல் செய்யப்படுகிறது. கணக்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது தனிநபர் ஒருவருக்கான கட்டணம் குறைகிறது.
ஹலோ வேக்சின்ஸ் நிறுவனம் ஜேஸ்பரின் பேபி பாக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சேவைகளை அளித்து வருகிறது. பிறந்த குழந்தைகளுக்கு தேவையான சாதனங்களை இலவசமாக அளிக்கிறது. பரிசுகளையும் சலுகைக் கூப்பன்களையும் அளிப்பதோடு குழந்தைகளின் சுயவிபரங்களையும் பெற்றுக்கொள்கின்றனர்.
போலியோ சொட்டு மருந்து தினத்திற்காக அரசு சார்பில் ஏற்கனவே எஸ்.எம்.எஸ் அனுப்பி நினைவூட்டும் பணியை இந்த நிறுவனம் செய்து வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment