அரசு கேபிள் டிவிக்கு ஒத்துழைப்பு தராவிட்டால் கட்டண சேனல்களுக்கு
ஒத்துழைப்பு தரமாட்டோம் என அரசு கேபிள் டி.வி. ஒளிபரப்பாளர்கள்
எச்சரித்துள்ளனர். அரசு கேபிள் டி.வி. ஒளிபரப்பாளர்கள் சங்க ஆலோசனை கூட்டம் விழுப்புரத்தில் நடந்தது. மாநிலத் தலைவர் யுவராஜ் தலைமை வகித்தார்.
கூட்டத்தில்
விழுப்புரம் மாவட்டத்தில் 1 லட்சத்து 20 ஆயிரம் வாடிக்கையாளர்களை
உள்ளடக்கிய 1200 கேபிள் ஆபரேட்டர்களும் பங்கேற்று அரசு கேபிள் டி.வி.யில்
இணைவதற்கு சம்மதம் அளித்தனர்.
அரசு கேபிள் டி.வி.க்கு கட்டண
சேனல்கள் ஒத்துழைக்க மறுத்தால் அந்த கட்டண சேனலுக்கு கேபிள் ஆபரேட்டர்கள்
யாரும் பணம் கட்ட கூடாது என்றும் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. அரசு கேபிள் டி.வி. செயல்படத் தொடங்கும் போது 50 லட்சம் இணைப்புகளுடன் செயல்பட ஏற்பாடு மேற்கொள்வது என்று தீர்மானிக்கப்பட்டது.
No comments:
Post a Comment