தேனி மாவட்டத்தைச் சேர்ந்த என்ஜீனியர் உதயக்குமார் உள்பட 21 இந்தியர்களுடன் எண்ணெய்க் கப்பலை சோமாலிய கடற் கொள்ளையர்கள் ஓமன் அருகே கடத்திச் சென்றுள்ளனர்.
சோமாலிய கடற் கொள்ளையர்களின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. இதை ஒடுக்க பல்வேறு நாடுகளும் தீவிர முயற்சி எடுத்து வருகின்றன. இந்த நிலையில் ஓமன் அருகே 21 இந்தியர்களுடன் ஒரு எண்ணெய்க் கப்பலை கடற் கொள்ளையர்கள் கடத்திக் கொண்டு போய் விட்டனர்.
அந்தக் கப்பலின் பெயர் எம்.வி. பேர்கெம் போகி. சலாலா என்ற இடத்திலிருந்து இந்தக் கப்பல் கடத்தப்பட்டுள்ளது. அக்கப்பலில் உள்ள 21 இந்தியர்களில் ஒருவர் தமிழகத்தின் தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர். அவரது பெயர் உதயக்குமார்.
உதயக்குமார் கடத்தப்பட் தகவல் வந்ததும், அவரது குடும்பத்தினர் தேனி மாவட்ட ஆட்சித் தலைவரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
கடத்தல்காரர்களைத் தொடர்பு கொள்ளும் முயற்சியில் அதிகாரிகள் இறங்கியுள்ளனர்.

No comments:
Post a Comment