குறித்து அவர் கூறியதாவது:
அண்ணா ஹசாரேவின் போராட்டத்தால் எந்தப் பலனும் இல்லை என்று நடிகை நமீதா கருத்து தெரிவித்துள்ளார். அன்னா ஹசாரேவின் போராட்டம் பரபரப்பு செய்திக்குதான் இன்று உதவிக் கொண்டிருக்கிறது. இந்தப் போராட்டத்தால் எந்தப் பலனும் ஏற்படப் போவதில்லை. நாட்டில் இன்றைக்கு முக்கியப் பிரச்சினை தீவிரவாதம்தான். அதை ஒழிக்கத்தான் நாம் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.கொடுப்பதை நிறுத்தினால் வாங்குவதும் நின்று போகும். குறிப்பாக கார்ப்பரேட் நிறுவனங்கள், பெரிய மனிதர்கள் காரியம் சாதிக்க லஞ்சம் கொடுப்பதை நிறுத்தட்டும்.
ஊழல் ஏதோ இன்று நேற்று வந்துவிடவில்லை. பல நூறு ஆண்டுகளாக இந்த நாட்டில் வேரூன்றிப் போன ஒன்று. அதை இந்த மாதிரி திடீர் போராட்டங்களால் ஒழிக்க முடியாது. ஹசாரே அரசியலமைப்புடன் சண்டை போட்டுக் கொண்டிருப்பது தவறு. லஞ்சம் தரக்கூடாது என்ற உணர்வை முதலில் மக்களிடம் உண்டாக்க ஹசாரே போன்றவர்கள் முயற்சிக்க வேண்டும்.
நான் குஜராத் மாநிலத்தில் பிறந்தவள். காந்தி பிறந்த மண்ணில் பிறந்த எனக்கு காந்தீய போராட்டத்தின் அடிப்படை தெரியும். ஹஸாரேயின் போராட்டம் காந்தீய போராட்டமல்ல. உண்ணாவிரதமிருந்தால் காந்தியாகிவிட முடியாது. காந்தியுடன் மக்கள் இருந்தார்கள். 100 சதவீத வெற்றி அவருக்குக் கிடைத்தது. ஹசாரே போராட்டம் சிலரால் திட்டமிடப்பட்டதாக தெரிகிறது. இதற்கு 20 சதவீத பலன் கூட இருக்காது என நமீதா தெரிவித்துள்ளார்.
* யாராவது இந்த கொசுவ அடிங்கலேன்!
No comments:
Post a Comment