|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

21 August, 2011

எம்.பி.,க்கள், அமைச்சர் வீடு முன்பு தர்ணா!


ஜன் லோக்பால் மசோதா நிறைவேற்றக்கோரி ஹசாரே மேற்கொண்டுள்ள உண்ணாவிரதம் வலுப்பெற்று வரும் நிலையில் நாடு தழுவிய கிளர்ச்சியாக மாற்ற ஹசாரே குழுவினர் முடிவு செய்துள்ளனர். இந்த பிரச்னையை வலியுறுத்தி நாடு முழுவதும் உள்ள எம்.பி.,க்கள் மற்றும் அமைச்சர்கள் வீடு முன்பாக தர்ணா போராட்டம் நடத்த வேண்டும் என கேட்டு கொண்டுள்ளனர். இதற்கிடையில் இன்று ( 6 வது நாள் ) உண்ணாவிரத மேடையில் பேசிய ஹசாரே தமது போராட்டம் பேச்சுவார்த்தை கதவை மூடியதாக அர்த்தம் இல்லை. பேச்சுவார்த்தை மூலம் பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படும், நாங்கள் திறந்த மனதுடன் இருக்கிறோம் லோக்பால் நிறைவேறும் வரை பின்வாங்கப்போவதில்லை, இது புரட்சி ஏற்படுத்துவதற்கான நேரம் என்றும் தெரிவித்தார். இவரது பேச்சு பிரதமர் நேற்று தெரிவித்த கருத்தின் அடிப்படையில் இருந்தது.

டில்லி, மும்பை, கோல்கட்டா, கவுகாத்தி, பெங்களூரூ, சென்னை மற்றும் வெளிநாடுகளான லண்டன், அமெரிக்கா, ஜெர்மனி, மெல்போர்ன், கனடா என ஹசாரே போராட்டத்திற்கு உலகளாவிய ஆதரவு பெருகி வருகிறது. முக்கிய நகரங்களில் மாணவர்கள், குழந்தைகள் உள்பட உண்ணாவிரதம் , ஆர்ப்பாட்டம், பேரணி என சூடு பிடித்துள்ளது. டில்லி ராம்லீலா மைதானம் ஆர்வலர்களால் ( 70 ஆயிரம் பேர் வரை ) நிரம்பி வழிய துவங்கியது. இன்னும் பலர் குவிந்தால் மைதானம் தாக்குப்பிடிக்குமா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.

ஹசாரே குழுவினர்அவசர ஆலோசனை இதற்கிடையில் ஹசாரே குழுவில் இடம் பெற்றுள்ள ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி கிரண்பேடி, அர்விந்கெர்ஜ்வால், மேதாபட்கர் உள்ளிட்டோர் அவசர ஆலோசனை நடத்தினர். ஆலோசனைக்கு பின்னர் நிருபர்களிடம் பேசிய அரவிந்த் கெர்ஜ்வால் கூறுகையில்; பேச்சுவார்த்தைக்குரிய முறையான அழைப்பு இதுவரை அரசிடம் இருந்து எங்களுக்கு வரவில்லை. வரும்பட்சத்தில் யாருடன், என்னவிவரம், எங்கே என்பது குறித்த விஷயங்கள் தொடர்பாக இன்று விவாதித்தோம் என்றார். மேலும் தங்களுக்கான ஆதரவு பெருகிவரும்வேளையில் அனைவரும் அனைத்து எம்.பி.,க்கள் வீடு முன்பாக தர்ணா போராட்டம் நடத்த கேட்டுக்கொண்டுள்ளோம். இந்த தர்ணா மூலம் அமைச்சர்கள் அனைத்து அரசியல்வாதிகள் கவனத்தை ஈர்க்க முடியும் என்றனர். மத்திய அரசுக்கு அனைவரும் ஜன்லோக்பால் வலியுறுத்தி கடிதமும் எழுத கோரியுள்ளோம்.

அன்னாவின் மாரத்தானில் ஓட தயார் என்கிறது காங்.,இன்று செய்தியாளர்களிடம் பேசிய காங்., செய்தி தொடர்பாளரும், பார்லி., நிலைக்குழு தலைவருமான அபிஷேக்சிங்வி ; அன்னா பரிந்துரைத்த அம்சங்கள் குறித்து லோக்பால் வரைவு மசோதா நகல் எங்களிடம் இருக்கிறது, இதனை நிலைக்குழு பரிசீலித்து வருகிறது. இந்தக்குழு வாய்பளித்தால் நாங்களும் மகிழ்ச்சி அடைவோம். ஊழலுக்கு எதிரான மக்கள் உணர்வில் நாங்களும் பங்கேற்கிறோம். இந்த விஷயத்தில் ஹசாரேவும், அரசும் ஒரே இலட்சியம்தான் கொண்டுள்ளது. ஆனால் முறைகளில்தான் வேறுபாடு உள்ளது. ஹசாரேயின் போராட்ட மாராத்தானில் நாங்களும் பங்கேற்க தயாராகத்தான் இருக்கிறோம் என்றார்.

மும்பையில் பேரணி:ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரதம் இருந்து வரும் 
ஹசாரேவுக்கு ஆதரவாக மும்பையில் பந்த்ராவிலிருந்து ஜூகு வரை பேரணி நடந்தது. இந்த பேரணியில் ஒருலட்சம் பேர் மழை பெய்தாலும் அதனை பொருட்படுத்தாமல் கலந்து ூகொண்டு ஹசாரேவுக்கு தங்களது தெரிவித்தனர். மும்பையில் நடந்த பேரணியில் இது மிகப்பெரியது ூஎன அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். கடைக்காரர்கள் அன்னாவுக்கு ஆதரவு தெரிவித்து தங்களது கடைகளை அடைத்தனர். இந்த பேரணி சுமார் 5 கி.மீ., நடைபெற்றது. இதே போல் ஹசாரேவுக்கு ஆதரவு தெரிவித்து ஜெய்ப்பூர், கர்நாடகாவிலும் பேரணி நடந்தது. டில்லியில் இந்தியா கேட் பகுதியில் அன்னாவுக்கு ஆதரவு தெரிவித்து பல்லாயிரகணக்கான மக்கள் கூடியுள்ளனர். 

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...