பீட்சா ஹட்டின் அனைத்து கிளைகளிலும் இனி பீர், ஒயின் கிடைக்கும். இந்த திட்டம் முதலில் டெல்லி மற்றும் பெங்களூரில் தான் சோதனை அடிப்படையில் அறிமுகம் செய்யப்படுகிறது.
இது குறித்து பீட்சா ஹட்டின் விளம்பரப் பிரிவு தலைவர் சுனய் பாசின் கூறியதாவது, நாங்கள் டெல்லியில் உள்ள 2 கடைகளில் பீர் மற்றும் ஒயினும், பெங்களூரில் உள்ள 5 கடைகளில் ஒயினும் அளிக்கிறோம். இது படிப்படியாக மற்ற கிளைகளுக்கும் அறிமுகப்படுத்தப்படும். அனைத்து கிளைகளிலும் இந்த சேவையை விரிவுபடுத்துவது தான் எங்கள் நோக்கம். சிறிய நகரங்களில் கிராக்கி அதிகரித்து வருவதால் வரும் 2015-க்குள் டயர் II, டயர் III நகரங்களில் பீட்சா ஹட் திறக்கப்படும்.
வரும் 2015-க்குள் தற்போதுள்ளதைவிட 50 சதவீதம் அதிக கிளைகள் திறக்கவிருக்கிறோம். அதாவது 180 முதல் 200 கிளைகள் திறக்கவுள்ளோம் என்றார். ரூ. 9 ஆயிரம் கோடி மதிப்பிலான பீட்சா ஹட் 25 சதவீத வளர்ச்சி கண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment