வரும் ஜனவரியில் வெஸ்பா ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்படும் என்று
அறிவித்துள்ள பியாஜியோ, 2013ல் ஆண்டுக்கு 3 லட்சம் ஸ்கூட்டர்களை உற்பத்தி
செய்ய திட்டமிட்டுள்ளது. இத்தாலியை சேர்ந்த பியாஜியோ நிறுவனம் மீண்டும் தனது வெஸ்பா பிராண்டு ஸ்கூட்டர்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.
வரும் ஜனவரியில் டெல்லியில் நடைபெறும் ஆட்டோ எக்ஸ்போவில் வெஸ்பா ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்படும் என்று பியாஜியோ அறிவித்துள்ளது. மேலும், மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் வெஸ்பா ஸ்கூட்டரின் விற்பனையை துவக்கவும் அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்காக, புனேயில் உள்ள தனது தொழிற்சாலையில் வரும் டிசம்பர் மாதம் ஸ்கூட்டர் உற்பத்தி அந்த நிறுவனம் துவங்குகிறது.
இதுகுறித்து பியாஜியோ நிறுவன தலைவர் ரவி சோப்ரா கூறியதாவது:"திட்டமிட்டபடி வெஸ்பா ஸ்கூட்டர் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்ய இருக்கிறோம். இதற்காக, ரூ.190 கோடி முதலீட்டில் ஆண்டு்ககு 1.5 லட்சம் ஸ்கூட்டர்களை உற்பத்தி செய்யும் திறன்கொண்ட ஆலையை கட்டியுள்ளோம்.மேலும், இந்திய சந்தையில் பவர் ஸ்கூட்டர்களுக்கு நல்ல வரவேற்பு இருப்பதால், வரும் 2013ம் ஆண்டில் ஆண்டுக்கு 3 லட்சம் ஸ்கூட்டர்களை உற்பத்தி செய்யும் வகையில் ஆலையை விரிவாக்கம் செய்ய இருக்கிறோம்.
தவிர, ஹைஎண்ட் மற்றும் பிரிமியம் மோட்டார்சைக்கிள்களை அறிமுகம் செய்யவும் திட்டமிட்டு இருக்கிறோம். இதற்காக, சந்தையின் வளர்ச்சியை கூர்ந்து கவனித்து வருகிறோம்," என்றார்.

No comments:
Post a Comment