உலகின் சக்தி மிகுந்த 100 பெண்களில், 4வது இடத்தில் உள்ளதாக போர்ப்ஸ்
பத்திரிகையால் தேர்ந்தெடுக்கப்பட்டவரும், பெப்சி முதன்மை நிர்வாக அலுவலர்
மற்றும் தலைவருமான இந்திரா கிருஷ்ணமூர்த்தி நூயி: என் சொந்த ஊர் சென்னை.
டிகிரி முடிச்சதும், படிப்பு இதோட முடியலன்னு தோணிச்சு. சேலஞ்சிங்கா ஏதாவது
படிக்கலாம்னு நினைச்சேன். மாஸ்டர் டிகிரி பிசினஸ்ல பண்ணலாம்ன்னு
அப்பாகிட்ட கேட்டேன். அப்பா என் படிப்புக்கு உறுதுணையாக இருந்தார்.
கோல்கட்டா ஐ.ஐ.எம்.,ல் எம்.பி.ஏ., அப்ளை பண்ணினேன். அந்த நேரத்தில்
இந்தியாவிலேயே இரண்டு பிசினஸ் ஸ்கூல் தான் இருந்தது. எம்.பி.ஏ.,
முடிக்கறப்போ தான் உலகம் எவ்வளவு பெரிசுன்னு தெரிஞ்சுது. எம்.பி.ஏ.,
முடித்ததும், சிறிது காலம் ஏ.பி.பி., நிறுவனத்தில் பணியாற்றினேன்; பின்,
"ஜான்சன் அண்ட் ஜான்சன்ஸ்' நிறுவனத்தில், புராடக்ட் மேனேஜராக பணியில்
சேர்ந்தேன். அங்கே வெற்றிகரமாக பணியாற்றினாலும், கார்ப்பரேட் உலகில்
நிலவும் போட்டியை எதிர்கொள்ள வெறும் எம்.பி.ஏ., படிப்பு போதாது என்று
முடிவு செய்து, "பப்ளிக் அண்ட் பிரைவேட் மேனேஜ்மென்ட்' படிப்பிற்காக
அமெரிக்காவின், "யேல்' பல்கலைக் கழகத்தில் சேர்ந்தேன். படிக்கும்
காலத்தில், படிப்பு செலவுக்காக, "பார்ட் டைம் ரிசப்ஷனிஸ்ட்' வேலை செய்தேன்.
படிப்பு முடிந்த பிறகு, பெப்சி நிறுவனத்தில், 1994ல் நுழைந்த போது, என்
வாழ்க்கையில் திருப்பம் ஏற்பட்டது. நான் மட்டும் ஒரு ஆணாக
இருந்திருந்தால், இந்த இடத்தை அடைய என் உழைப்பில் பாதியை செலவிட்டிருந்தாலே
போதும். பெண்ணாக இருந்ததால் இரு மடங்கு அதிகமாக உழைத்திருக்கிறேன். இந்த
உழைப்புக்காக, இந்திய அரசு கடந்த 2007ம் ஆண்டு பத்ம பூஷன் விருது
வழங்கியது.
No comments:
Post a Comment