புனித சேவையாக கருதப்படும் மருத்துவ சேவையில்,
முறைகேடுகள் அதிகரித்து வருகின்றன. டாக்டர்களும், தனியார் மருத்துவ
துறையினரும் மருத்துவ நெறிகளை காற்றில் பறக்கவிட்டு விட்டு, பணத்தை மட்டுமே
குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றனர் என, பரவலாக
குற்றம்சாட்டப்படுகிறது. சாதாரண வயிற்று வலிக்குச் சென்றால் கூட, ரத்தப்
பரிசோதனையில் தொடங்கி, சி.டி.ஸ்கேன் வரை பரிந்துரைக்கும் டாக்டர்களின்
எண்ணிக்கை பெருகி வருகிறது. பரிசோதனை மையங்களில் இருந்து கிடைக்கும்
கமிஷனுக்காக டாக்டர்கள், தேவையில்லாமல் பல்வேறு பரிசோதனைகளை, நோயாளியிடம்
திணிக்கின்றனர் என்றும், புகார் தெரிவிக்கப்படுகிறது. பரிசோதனைக்
கட்டணத்தில், 25 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை கமிஷனாக, டாக்டர்களுக்கு
வழங்கப்படுகிறது. இதுதவிர, குறிப்பிட்ட மருந்து நிறுவனத்தின் மருந்துகளைப்
பரிந்துரைக்கவும் டாக்டர்கள் பல்வேறு வழிகளில் "கவனிக்கப்படுகின்றனர்'
என்று கூறப்படுகிறது. ஆனால், டாக்டர்கள் இதை மறுக்கின்றனர். நோயின் தன்மையை
துல்லியமாகக் கண்டறிவதற்காக இதுபோன்று பல்வேறு பரிசோதனைகள்
தேவைப்படுகின்றன. ஏதாவது தவறு நடந்துவிட்டால், கவனக்குறைவாக இருந்ததாகச்
சொல்லி, நுகர்வோர் சட்டத்தை நோயாளிகள் நாடுவதும் அதிகரித்துள்ளது. இதனால்,
உரிய பரிசோதனைகள் தேவைப்படுகின்றன என்று, டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.
டாக்டர்களுக்கு கமிஷன் கொடுக்கப்படுகிறதா, இல்லையா என்பது சர்ச்சைக்குரிய
விவாதமாக தொடர்கிறது. தனியார் மருத்துவமனைகளையும், பரிசோதனை மையங்களையும்
ஒழுங்குபடுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக எழுப்பப்படுகிறது. மருத்துவக்
கட்டணங்களை முறைப்படுத்த வேண்டும். பரிசோதனை நடைமுறைகளில் இன்னும் அதிக
வெளிப்படைத் தன்மை தேவை என, பொதுமக்கள் மட்டுமின்றி, மருத்துவத்
துறையினரும் விரும்புகின்றனர்.
ஆகாஷ் மருத்துவமனை தலைவர் டாக்டர் காமராஜ், இதுகுறித்து கூறியதாவது: கல்வி, மருத்துவத்தில் தனியாரின் ஆதிக்கம் அதிகமாகி விட்டது. இதை அரசு ஒழுங்குபடுத்த வேண்டும். அரசு பரிசோதனை மையங்களை அதிக அளவில் ஏற்படுத்தி, சிறப்பாக செயல்படச் செய்தால், இந்த பிரச்னைகளுக்கு ஓரளவு தீர்வு காணலாம். ஆனால் எது, தேவையில்லாமல் பரிசோதனை என சொல்வது கடினம். தலைவலிக்காக சிகிச்சைக்கு வருபவருக்கு, "சி.டி. ஸ்கேன்' தேவையில்லை என்று ஒதுக்கிவிட முடியாது. தலையில் கட்டி இருந்து, அதை கண்டுபிடிக்காமல் போய்விட்டால், அப்போது டாக்டரை தான் குறை கூறுவர். எனவே, ஏழை மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் பரிசோதனை வசதிகள் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதவிர, கமிஷன் கொடுப்பதாகக் கூறுவதில் உண்மை இல்லை என முற்றிலும் மறுத்து விடவும் முடியாது. மருத்துவமனைகளும், பரிசோதனை மையங்களும் "கார்ப்பரேட்' நிறுவனங்களாகி விட்டதால், அங்கு வியாபாரம் தவிர்க்க முடியாததாகி விடுகிறது. இவ்வாறு காமராஜ் கூறினார்.
சென்னை பவித்ரா மருத்துவமனை டாக்டர் சுரேஷ் கூறும்போது, ""அந்தந்த நோய்களுக்கு, அதற்குரிய டாக்டரை அணுகும்போது, தேவையில்லாத பரிசோதனைகளைத் தவிர்க்கலாம்.டாக்டரின் அலட்சியமே காரணம் என்ற கூறி, ஒருவேளை வழக்குகளை சந்திக்க வேண்டியதிருக்குமோ என்ற தற்காப்பு உணர்விலும் கூடுதல், "டெஸ்டு'களை எழுத வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. ஆனால், கமிஷனுக்காக பரிசோதனைகளை பரிந்துரைப்பதில்லை,'' என்றார்.
பாரத் ஸ்கேன் நிர்வாகி முனுசாமி, கூறியதாவது: இப்போது, நவீன தொழில் நுட்ப வசதி இருப்பதால், அதைப் பயன்படுத்தி நோயை சரியாகத் தெரிந்து கொள்ளவே, ஒன்றுக்கும் மேற்பட்ட பரிசோதனைகளை டாக்டர்கள் பரிந்துரைக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. இதனால், வெளியே தெரியாமல் உடலுக்குள் பதுங்கியிருந்த நோய்கள் கண்டுபிடிக்கப்பட்டு, பல உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. பரிசோதனைகளுக்காக டாக்டர்களுக்கு நாங்கள் கமிஷன் கொடுப்பதில்லை. பிரபலமாகாத, "ஸ்கேன்' மையங்கள் வேண்டுமானால் தங்களை பிரபலப்படுத்த கமிஷன் தரலாம். ஆனால், மருத்துவ மாநாடுகள், மருத்துவ மாணவர்களுக்கான பயிலரங்குகளுக்கு நாங்கள், "ஸ்பான்சர்' செய்கிறோம். இவ்வாறு சுரேஷ் கூறினார்.
ஆர்த்தி ஸ்கேன் மைய மேலாளர் மரியதாஸ் கூறும்போது, ""பரிசோதனை செய்யும் 100 பேரில், 80 பேருக்கு நோய் இல்லாமல் இருக்கலாம். 20 பேருக்கு நோய் இருக்கலாம். ஆனால், யார் அந்த 20 பேர் என்பது சோதனைக்குப் பின் தான் தெரியும். டாக்டர்களுக்கு நாங்கள் கமிஷன் கொடுப்பதில்லை. டாக்டர் சங்கங்களின் நிகழ்ச்சிகளுக்கு ஏதாவது,"ஸ்பான்சர்' செய்வதுண்டு'' என்றார்.

No comments:
Post a Comment