விக்கிலீக்ஸ்' இணைய தளத்தில் இருந்து எடுக்கப்பட்டதாகக் கூறி, தி.மு.க., -
காங்கிரசார் பெயர்கள் அடங்கிய, சுவிஸ் வங்கியில் பணம் முதலீடு செய்தோர்
பட்டியல் நகல் வினியோகிக்கப்படுகிறது. சுவிஸ் வங்கியில் முதலீடு
செய்துள்ளோர் பட்டியலை வெளியிட வேண்டுமென, இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில்
உள்ளோர் குரல் எழுப்பி வருகின்றனர். அப்பட்டியலை, "விக்கிலீக்ஸ்' இணையதளம்
சிறிது சிறிதாக அவ்வப்போது வெளியிட்டு, அமளியை ஏற்படுத்தி வருகிறது.
"இப்பட்டியல் சரியானது' என, சுவிஸ் வங்கியும், "இப்பட்டியல் தவறானது' என,
சம்பந்தப்பட்டோரும் கூறி வருகின்றனர். ஆனாலும், இந்த இணைய தளத்தில்
வெளியான பட்டியல் ஒரு சிலரைக் கூட சென்றடையாமல், இணைய தளம் தடை
செய்யப்பட்டது. இந்த இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்டதாகக்
கூறி, தி.மு.க., - காங்., பிரமுகர்கள், அமைச்சர்கள், வி.ஐ.பி.,க்கள் பெயர்,
அவர்கள் முதலீடு செய்துள்ள தொகை ஆகிய விவரங்கள் அடங்கிய நகல்கள், ஈரோடு
மக்களிடம் நேற்று வினியோகிக்கப்பட்டது. அதில், நிரா ராடியா, முன்னாள்
பிரதமர் ராஜிவ், நரேஷ்கோயல், கருணாநிதி, ஸ்டாலின், ஆ.ராஜா ,
எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், லாலு, உட்பட பலரது பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இந்த
நகல் உண்மையானதா என்பதை விட, இந்த நகல்கள் அதிக அளவில் ஜெராக்ஸ் எடுத்து
மக்களுக்கு வினியோகிக்கப்படுவதால், தி.மு.க., - காங்., பிரமுகர்கள்
அதிர்ச்சியடைந்துள்ளனர்.
No comments:
Post a Comment