அமெரிக்கா எப்போதுமே "ஏஏஏ' நாடுதான் என்று, அதிபர் பாரக் ஒபாமா
தெரிவித்துள்ளார். அமெரிக்க வெள்ளை மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் அவர்
கலந்து கொண்டு பேசியதாவது, அமெரிக்காவின் கடன் மதிப்பீடு குறியீடு
பாதுகாக்கப்பட வேண்டியது தான் என்றாலும், அது நிதிப் பற்றாக்குறையின்
காரணமாகவே சரிவடைந்துள்ளது. நாட்டின் பொருளாதாரப் பிரச்னைகள் தீர்க்கப்பட
கூடியதுதான் என்றாலும், அதற்கு அரசியல்ரிதீயான ஒத்துழைப்பு அவசியம் என்று
அவர் கூறினார். "எஸ் அண்டு பி' நிறுவனம், அமெரிக்கா, "ஏஏஏ' என்ற
நிலையிலிருந்து "ஏஏ+' நிலைக்கு குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
ஆனால் இது முற்றிலும் தவறாகும். அமெரிக்கா எப்போதுமே "ஏஏஏ' நாடுதான் என்று
அவர் மேலும் கூறினார்.
No comments:
Post a Comment