ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை. விவேகானந்தர்.
01 August, 2011
ஓவர்' செக்ஸும், காபியும் பக்கவாதத்திற்கு இட்டுச் செல்லும்!
பக்கவாத நோய் மனிதர்களை முடமாக்கும் அபாயகரமான நோயாகும். மூளைக்கு செல்லும்
ரத்த குழாய்களின் சுவர்கள் வலுவிழக்கும் போது ரத்தம் கசிந்து பக்கவாதம்
ஏற்படுகிறது. காபி, உடற்பயிற்சி போன்றவை அதிகமானால் மூளையில் ரத்தக்
கசிவு ஏற்பட்டு பக்கவாதம் ஏற்படும் அபாயம் உள்ளது என நெதர்லாந்தை சேர்ந்த
நரம்பியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். பக்கவாதம்
ஏற்படுவதற்கான காரணம் குறித்து நெதர்லாந்தின் மருத்துவ பல்கலைக்கழகத்தின்
நரம்பியல் நிபுணர் மானிக் எச்.எம்.விலாக் என்பவர் தலைமையில்
ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அதிகமாக காபி குடிப்பதால்
மூளையில் ரத்த அழுத்தம் அதிகமாவதாக கண்டறிந்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment