சோமாலிய கடற்கொள்ளையர்களைக் கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்தும்
இந்தியா, இலங்கை கடற்படையினரால் தாக்குதலுக்கு உள்ளாகும் தமிழக மீனவர்களைக்
கண்டுகொள்ளவில்லை என, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர்
தா.பாண்டியன் குற்றம் சாட்டியுள்ளார்.
புதுக்கோட்டையில் நிருபர்களை சந்தித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் தா.பாண்டியன் கூறியதாவது: தமிழகத்தில் அதிகளவில் உள்ள நிலஅபகரிப்பு புகார்களை மீது, தமிழக அரசு தகுந்த நடவடிக்கை எடுத்து வருகிறது. இதை அரசியல் பழிவாங்கும் செயல் என யார் கூறினாலும், ஏற்க முடியாது. புகார்களுக்கு உள்ளாகும் கட்சி பிரமுகர்களிடம், அந்தந்த கட்சி தலைவர்களே விசாரித்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்க வழிவகை செய்தால், நில அபகரிப்பு வழக்குகள் குறைய வாய்ப்புள்ளது.
சோமாலிய கடல் கொள்ளையர்களை கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்தும் இந்திய கடற்படை, தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்கி வருவதை கண்டுக் கொள்ளாமல் இருக்கிறது. தமிழக மீனவர்களின் நலனை காக்க கச்சத்தீவை மீட்பதுதான் நிரந்தர தீர்வாக அமையும் என்றார் அவர்.

No comments:
Post a Comment