இன்று காலை தொடங்கிய நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரைப் பார்வையிட
இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் தலைமையில் அந்த நாட்டு எம்.பிக்கள் வருகை
தந்தனர். இதற்கு அதிமுக கடும் கண்டனம் தெரிவித்தது.
இன்று காலை மழைக்காலக் கூட்டத் தொடர் தொடங்கியது. அப்போது பார்வையாளர் மாடத்தில் இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் மற்றும் எம்.பிக்கள் ஆகியோர் அடங்கிய குழு வந்தது. அவர்களை ஒவ்வொருவரின் பெயரையும் தனித் தனியாக சொல்லி சபாநாயகர் மீரா குமார் வரவேற்றார். இதையடுத்து அதிமுக உறுப்பினர்கள்எழுந்து நின்று கடும் ஆட்சேபனை தெரிவித்தனர்.
தம்பித்துரை கூறுகையில்,போர்க்குற்றச்சாட்டுக்கு ஆளான நாட்டின் சபாநாயகர் மற்றும் எம்.பிக்களை இந்தியா அழைத்ததற்கு கடும் கண்டனம் தெரிவித்தார். அவருக்கு ஆதரவாக மதிமுக, இடதுசாரி எம்.பிக்களும் எழுந்து குரல் கொடுத்தனர். அவர்களை அமைதிப்படுத்த முயன்றார் மீரா குமார். ஆனால் அவர்கள் அமரவில்லை. இதனால் கோபமடைந்த மீரா குமார், விருந்தினர்களை வரவேற்றுத்தான் நமது நாட்டுக்குப் பழக்கம் என்று காட்டமாக கூறினார். இதையடுத்து அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்கள் அமர்ந்தனர்.
இந்த அமளியை அமைதியாக வேடிக்கை பார்த்தபடி இலங்கை குழுவினரும் அமர்ந்து அவை நடவடிக்கைகளை கண்டு களித்தனர்.

No comments:
Post a Comment