தமிழினத்துக்கு
எதிராகச் செயல்படும் இந்திய அரசைக் கண்டிப்பதாக திருமாவளவன் இன்று
வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தன் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை... தமிழினத்துக்கு
விரோதமான நடவடிக்கையில் இந்திய அரசு தொடர்ந்து செயல்பட்டு வருவதை
உறுதிப்படுத்தும் வகையில் இந்திய நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர்
தொடங்கிய முதல்நாள் அன்றே சிங்கள நாடாளுமன்றப் ரதிநிதிகளை விருந்தினர்களாக
அனுமதித்து தமிழர்களின் உணர்வுகளை இந்திய அரசு அவமதித்துள்ளது.
சிங்கள நாடாளுமன்ற பேரவைத் தலைவர் சமல் இராஜபக்சே தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 10 பேர் கொண்ட குழு இந்திய நாடாளுமன்ற மக்களவையில் பார்வையாளர்களாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று (1-8-2011) மக்களவை தொடங்கியதும் பேரவைத் தலைவர் திருமதி மீராகுமார், ""இலங்கையிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் 10 பேர் நமது மக்களவை நடவடிக்கைகளை கவனிக்க வந்திருக்கிறார்கள்!'' ன்று அறிவிப்புச் செய்திருக்கிறார். இந்த நடவடிக்கை கோடானுகோடித் தமிழர்களைக் காயப்படுத்தியுள்ளது. மேலும் இந்தக் குழு தொடர்ந்து 5 நாட்கள் தங்கியிருந்து பல்வேறு இடங்களைச் சுற்றிப்பார்க்க இருப்பதாகவும் அதற்குரிய ஏற்பாடுகளை இந்திய அரசு செய்திருப்பதாகவும் தெரியவருகிறது.
சிங்கள இராணுவத்தினருக்கு தமிழ்நாட்டிலேயே பயிற்சியளிப்பது, இந்திய அரசின் வெளியுறவுச் செயலாளர் நிருபமா ராவ் தன்னுடைய பதவி ஓய்வுபெறும் நிலையில் இராஜபக்சேவோடு விருந்தில் பங்கேற்பது போன்ற நடவடிக்கைகள் இந்திய அரசுக்கும் சிங்கள அரசுக்கும் இடையேயான உறவில் உள்ள இணக்கத்தையும் நெருக்கத்தையும் வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. இது தமிழர்களை அவமதிப்பதாக இருக்கும், தமிழர்களுக்கு திராக இந்திய அரசு செயல்படுகிறது என்ற கருத்து உருவாகும் ன்கிற அச்சம் இல்லாமல் இந்திய ஆட்சியாளர்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர்.
பதவி ஓய்வு பெற்றுவிட்ட நிலையிலும் இராஜபக்சேவோடு விருந்து உண்ட நிருபமா ராவை அமெரிக்காவுக்கான இந்தியத் தூதராக நியமித்திருப்பதை, தமிழினத்துக்கெதிராகச் செயல்பட்டதற்காகவே நிருபமா ராவுக்கு பாராட்டிப் பரிசு வழங்கியிருப்பதாகவே உணர முடிகிறது. இந்திய அரசின் இத்தகைய தமிழின விரோதப் போக்கை விடுதலைச் சிறுத்தைகள் மிக வன்மையாகக் கண்டிக்கிறது. சமல் இராஜபக்சே தலைமையிலான ரதிநிதிகளை உடனடியாக இலங்கைக்குத் திருப்பி அனுப்ப வேண்டும் னவும் இந்திய அரசை விடுதலைச் சிறுத்தைகள் கேட்டுக்கொள்கிறது.

No comments:
Post a Comment