விகிதாசாரப்படி உணவு அருந்தாவிட்டால் 4,448 வகையான நோய்கள்
வர வாய்ப்பு உள்ளது என்றார் சித்தவைத்திய மகாசங்க மாநிலத் தலைவர் கே.பி. அருச்சுனன். வேலூர் கோட்டை அரசு அருங்காட்சியகத்தில் "உணவே மருந்து- மருந்தே உணவு' எனும்
தலைப்பில், அவர் பேசியது: விகிதாசாரப்படி உணவு அருந்தாவிட்டால் 4,448 வகையான நோய்கள் வர வாய்ப்பு
உள்ளதாக சித்தமருத்துவத்தில் வரையறை செய்யப்பட்டுள்ளது. புது நோய்கள் வரக் காரணமே
உணவுமுறைதான்.
கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்னர் 45 வயதுக்குப் பின் இரு பாலருக்கும் 7 சதவீதம்
மட்டுமே இதயநோய் இருந்தது. ஆனால் 2005-2006 ஆய்வில் 7முதல் 15 வயதுக்குள்பட்ட 20
சதவீதம் பேருக்கு இதயம் தொடர்பான நோய்கள் இருப்பதாக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. இதய நோயை சித்தமருத்துவப்படி ஒற்றை செம்பருத்தி பூ மூலம் குணப்படுத்த முடியும்.
இந்நோயால் குறைவாகப் பாதிக்கப்பட்டவர்கள் ஒருசில வாரங்களிலும், அதிகமாக
பாதிக்கப்பட்டவர்கள் 3 மாதங்களிலும் ஒற்றை செம்பருத்தி மலர் மூலம் குணமடையலாம்
என்றார்.
No comments:
Post a Comment