அதிரடி மன்னன் ஜாக்கி சான் நடித்திருக்கும் 100வது படமான "1911" அக்டோபர்
13ம் தேதி ரிலீசாகிறது. இப்படத்தை தமிழகம் முழுவதும் வால்மார்ட் பிலிம்ஸ்
வெளியிட இருக்கிறது. ஹாலிவுட்டில் உள்ள பிரபலமான நடிகர்களில் ஜாக்கிசானும்
ஒருவர். அசத்தும் அதிரடி சண்டைக்காட்சிகளிலும், குறும்புதனமான காமெடியாலும்
ரசிகர்களை கவர்ந்தவர். 57வயதான ஜாக்கிசான் இப்போதும் சண்டைக்காட்சிகளில்
மிரட்டுகிறார். இவரது நடிப்பில் உருவாகியுள்ள படம் தான் 1911. ஜாக்கிசானின்
100வது படமான இப்படம் புரட்சி படமாகும்.
20ம் நூற்றாண்டின்
தொடக்கத்தில் பசி, பட்டினி, வறட்சி என்று கடுமையான நெருக்கடி நிலைக்கு
சீனா ஆளாகிறது. நாட்டை ஆளும் குயிங் வம்சத்தை சேர்ந்த ஏழு வயது அரசனும்,
அவரது இரக்கமற்ற அம்மாவும் இதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மக்களை
அடிமைப்படுத்துகின்றனர். இதனால் நாட்டில் கிளர்ச்சி ஏற்படுகிறது.
கிளர்ச்சியை ஒடுக்க ராணுவத்தை ஈடுபடுத்துகிறது குயிங் அரசு. இந்தசமயத்தில்
ஜப்பானிலிருந்து அதிநவீன ராணுவ பயிற்சியை முடித்து நாடு திரும்புகிறார்
ஜாக்கிசான். குயிங் வம்சத்திடம் நாடு அடிமைப்பட்டு கிடப்பதை பார்த்து,
மக்களோடு மக்களாக நின்று போர் புரிந்து நாட்டை மீட்க போராடுகிறார்.
கடைசியில் அதில் வெற்றி பெற்றாரா... இல்லையா... என்பதே படத்தின் கதை.
படத்தின்
போர்காட்சிகள் உட்பட ஒவ்வொரு காட்சியையும் தத்ரூபமாக படமாக்கியுள்ளனர்.
மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இப்படம் சிலநாடுகளில்
ரிலீசாகியுள்ளது. இந்தியாவில் வருகிற அக்டோபம் 13ம் தேதி ரிலீசாக
இருக்கிறது. அதில் தமிழகம் முழுவதும் வெளியிடும் உரிமையை வால்மார்ட்
பிலிம்ஸ் பெற்றுள்ளது.
No comments:
Post a Comment