யமுனை ஆற்றின் மாசுபாடு காரணமாக தாஜ்மகாலின் அடிக்கட்டுமானத்தில் கடும்
பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதே நிலை தொடருமானால், இன்னும் 5 ஆண்டுகளில்
தாஜ்மகால் இடியும் நிலை ஏற்படும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை
விடுத்துள்ளனர்.
காதல் மனைவி மும்தாஜூக்காக யமுனை நதிக்கரையில் 358 ஆண்டுகளுக்கு முன்
ஹாஜகான் கட்டிய காதல் ஓவியம் தாஜ்மகால். முற்றிலும் பளிங்கு கற்களால்
பளீரென கட்டப்பட்ட இந்த மாளிகை மெல்ல மெல்ல தன் பொலிவை இழந்து வருகிறது.
ஆக்ரா நகரின் தொழிற்சாலைகளில் இருந்து வெளிவரும் மாசுக்கள், காடுகள்
அழிப்பு மற்றும் யமுனை நதி மாசுபாடு காரணமாக தாஜ் மகால் பெரும் ஆபத்தை
எதிர்கொண்டுள்ளது. யமுனை நதி மாசு காரணமாக, தாஜ் மகாலின்
அடிக்கட்டுமானத்தில் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த அரிப்பு தாஜ்மகால்
முழுமையையும் சிதைக்க தயாராகி வருகிறது.
இந்நிலையில், தனியார் பத்திரிக்கை ஒன்றிற்கு பேட்டியளித்த ஆக்ரா
எம்.பி., ராம்சங்கர் கதேரியா, தாஜ்மகாலை பாதுகாக்க போர்க்கால நடவடிக்கை
எடுக்காவிட்டால் இன்னும் 5 ஆண்டுகளில் அது முற்றிலும் இடிந்து விடும்
வாய்ப்புகள் உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் தாஜ்மகாலின் அடித்தளம்
கடினமான மரத்தால் ஆனது. யமுனையின் மாசு காரணமாக அதில் அரிப்பு
ஏற்பட்டுள்ளதால், அரசு அதை பார்க்க அனுமதிப்பது இல்லை என்று தெரிவித்தார்.
No comments:
Post a Comment