பெரு நாட்டில் செக்ஸ் அடிமைகளாக இருந்த 10 சிறுமிகள் உட்பட 300 இளம்பெண்களை அந்நாட்டு போலீசார் விடுவித்தனர். பெரு
நாட்டில் உள்ள சுரங்கங்களில் இருந்து அதிகளவிலான தங்கம் உற்பத்தி
செய்யப்படுகிறது. தங்கம் உற்பத்தியில் உலகிலேயே பெரு 5வது இடத்தில் உள்ளது.
இந்நிலையில் பெரு நாடு பலான விஷயத்திலும் கொஞ்சம் அப்படி இப்படி தான்
என்பது சமீபக் கால போலீஸ் ரெய்டுகள் மூலம் தெரிய வருகிறது.
பெரு
நாட்டில் உள்ள அமசான் பகுதியில் பல வர்த்தக பகுதிகள் உள்ளன. இந்த பகுதியில்
சட்டவிரோதமான தங்க சுரங்கத் தொழிலும் அதிகமாக நடந்து வருகிறது. கடந்த 3
நாட்களுக்கு முன் 400 பேர் அடங்கிய போலீஸ் படை, அந்த பகுதி முழுவதையும்
சுற்றி வளைத்து, ரெய்டு நடத்தினர்.
இதில் அங்கு இயங்கி வந்த பல
கடைகளில் இளம்பெண்களே அதிகளவில் வேலை செய்து வருவது தெரிந்தது. மேலும்
அவர்கள் மறைமுகமாக விபச்சாரத் தொழிலில் ஈடுபடுத்தப்படுவது தெரிந்தது. அந்த
வகையில் இங்கிருந்த 50க்கும் மேற்பட்ட கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களை
சோதனையிட்டு, விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 300 இளம்பெண்களை போலீசார்
மீட்டனர். மீட்கப்பட்டவர்களில் 10 பேர் 15 வயதை கூட எட்டாதவர்கள்.
அவர்கள்
விபசாரத்தில் ஈடுபடுத்திய 4 பேரை பியூர்டோ மால்டோநன்டோ என்ற இடத்தில்
போலீசாரால் கைது செய்யப்பட்டனர். வயதிற்கு கூட வராத சிறுமிகளுக்கு
இங்குள்ள கடைகளிலும், வர்த்தக நிறுவனங்களிலும் வேலை தருவதாக ஆசை வார்த்தை
காட்டி இங்கு கூட்டி வரப்படுகின்றனர். இதற்காக சில பெண் புரோக்கர்கள்
உள்ளனர்.
இதேபோல கடந்த மாதம், மேட்ரி டி டியோஸ் மாநிலத்தில்
செயல்படும் சட்டத்திற்கு புறம்பான சுரஙகளில் செக்ஸ் அடிமைகளாக
கொடுமைப்படுத்தப்பட்ட 1,100 சிறுமிகளை தொண்டு நிறுவனம் ஒன்று மீட்டது. இதுமட்டுமின்றி
நாட்டின் நெடுஞ்சாலைகளில் உள்ள உரிமை பெறாத பார்களில் பெண் அடிமைகளை
வைத்து விபச்சாரம் நடந்து வருவதையும், அந்நாட்டு போலீசார் கண்டுபிடித்து
உள்ளனர். இந்த தகவலை பெரு நாட்டு போலீசார் வெளியிட்டுள்ளனர்.
No comments:
Post a Comment