ஒரு சராசரி குடும்பத்தில் பிறந்து, இன்று டில்லியில் உள்ள அமைச்சரவை
அலுவலகத்தில் பணிபுரிய தேர்வாகியுள்ள அபிராமி: என் சொந்த ஊர் சேலம். நான்
பிளஸ் 2வில், 1,101 மார்க் எடுத்தேன். எனக்கு இன்ஜினியராக வேண்டும் என்று
ஆசை. ஆனால், என் குடும்பச் சூழ்நிலையால், என்னால் படிக்க முடியவில்லை.
அதனால், மனதை தேற்றிக் கொண்டு, பி.எஸ்சி., இயற்பியல் சேர்ந்தேன். அதன்
பின், பி.எட்., முடித்துவிட்டு, ஒரு பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்தேன்.
இந்த சமயத்தில் தான், குரூப் தேர்வுகளை எழுத ஆரம்பித்தேன். அதற்காக
இடைவிடாமல் படித்தேன். வங்கித் தேர்வுகள் உட்பட ஒன்றுவிடாமல் எழுதினேன்.
கடைசியில், தபால் துறையில் கிளர்க் வேலை கிடைத்தது. அதன் பின்பும், குரூப்
தேர்வுகள் எழுதுவதை விடவில்லை. அப்போது தான், ஸ்டாப் செலக்ஷன் கமிஷனில்
இருந்து அறிவிப்பு வந்தது. இந்த தேர்விற்காக நான்கு மாதம் முழு
முயற்சியுடனும், ஈடுபாட்டுடனும் படித்தேன்.
என் முயற்சிக்கான பலன்
கிடைத்து விட்டது. இந்தத் தேர்வில், தமிழகத்தில் இருந்து தேர்வாகியுள்ள
ஆட்களில், நானும் ஒருத்தி. டில்லி மத்திய அமைச்சரவை அலுவலகத்தில் வேலை.
வரும் நவம்பர் மாதம் போஸ்டிங் கிடைக்கும். நான் ஒவ்வொரு தேர்வு எழுதும்
போதும், வேதனைப்பட்ட விஷயம், ஊழல் தான். எங்கு திரும்பினாலும், பணம் கேட்டு
நச்சரித்தனர். கையில் பணத்துடன் போனால், வேலை சுலபமாக முடிந்துவிடும் என்ற
நிலை இன்று, நிறைய இடங்களில் உள்ளது. அந்த நிலையை மாற்ற, நான் முயற்சி
செய்வேன். ஊழலற்ற அதிகாரியாக நான் எப்போதும் செயல்படுவேன். இன்று, டி.என்.
பி.எஸ்.சி., மட்டும் தான் உள் ளது என்று நிறைய பேர் நினைக்கின்றனர். நிறைய
வாய்ப்புகள் உள்ளன. முறையான தேடுதலும், அதற்கான கடின உழைப்பும் நம்மிடம்
இருந்தால், அனைத்திலும் சாதிக்கலாம்; இதற்கு நானே உதாரணம்.
No comments:
Post a Comment