போலீசாரிடம் கேட்டபோது, " செல்வராஜ் சம்மாட்டியை பிடித்து விசாரிக்க உள்ளோம்' என்றனர்.இதுகுறித்து முனியசாமியின் மனைவி மூக்குப்புரி கூறுகையில், "" தூத்துக்குடி காயல் கடற்கரை கிராமத்தில் செல்வராஜ் சம்மாட்டிக்கு சொந்தமான தோப்பில் வேலைக்கு சேர்ந்தோம். குழந்தைகளும், உப்பளத்தில் வேலை பார்த்தனர். எங்களை அடித்து துன்புறுத்தினர். மீன்பிடிக்க படகில் அனுப்பப்பட்டோம். எங்களுடன் கூடுதல் ஆட்களை அனுப்ப கூறியதற்கு சம்மாட்டி மறுத்தார். கடலுக்கு செல்ல மறுத்த எனது கணவரை அடித்துக் கொன்றார். குழந்தைகளையும் கொன்று விடுவார்களோ என பயந்து, அங்கிருந்து தப்பி வந்து விட்டோம். அரசுதான் எங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்,'' என்றார். இவ்வாறு, 15 ஆண்டுகளாக அடித்து, உதைத்து துன்புறுத்தப்பட்ட முனியசாமி குடும்பத்தினர், கடந்த அக்., 9ல் செல்வராஜிடம் இருந்து தப்பினர். அதன்பின், வேன் மூலம் ராமேஸ்வரம் தங்கச்சிமடம் வந்தவர்கள், செல்வராஜ் தங்களைத் தேடி வரக்கூடும் என்ற பயத்தில், நாலுபனை கிராமம் அருகே உள்ள சவுக்குக் காட்டில், ஒரு வாரமாக பதுங்கி இருந்தனர்.
இதுதெரிந்த கிராமவாசிகள், நேற்று காலை இவர்களை கிராமத்திற்குள் அழைத்து வந்தனர். ராமேஸ்வரம் தாசில்தார் கதிரேசன், நேரில் வந்து விசாரணை நடத்தினார். அதன்பின், செல்வராஜ் சம்மாட்டியிடம் மொபைல் போன் மூலம் விசாரித்தார். உயர் அதிகாரிகளுக்கு இவர்கள் குறித்த தகவலைத் தெரிவித்து, உரிய நடவடிக்கை எடுப்பதோடு, பாதுகாப்பு அளிக்கப்படும் என உறுதி அளித்தார்.
No comments:
Post a Comment