ஹரியானாவின் ஹிசார்
மக்களவைத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் ஹரியானா ஜன்ஹித்
காங்கிரஸ்(பஜன்லால்) வேட்பாளர் குல்தீப் பிஷ்னோய் சுமார் 6323 வாக்குகள்
வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். அவருக்கு பாஜகவும் ஆதரவு
தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது அவருக்கு அடுத்தபடியாக
ஐஎன்எல்டி வேட்பாளர் அஜய் செளதாலா இரண்டாவது இடத்தைப் பிடித்தார். எனினும்
காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜெய்ப்ரகாஷ் இந்த தேர்தலில் மூன்றாவது இடத்தையே
பிடிக்க முடிந்தது. குல்தீப் பிஷ்னோய்க்கு 355941 வாக்குகளும், அஜய் செளதாவுக்கு 349618 வாக்குகளும், ஜெய்ப்ரகாஷுக்கு 149785 வாக்குகளும் கிடைத்தன.
இந்த தேர்தலில் காங்கிரஸுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று வாக்காளர்களை அண்ணா ஹசாரே கேட்டுக்கொண்டிருந்தார். இருப்பினும்,
இந்தத் தேர்தலில் குல்தீப் பிஷ்னோய்க்கும், செளதாலாவுக்கும் இடையேதான்
முக்கியப் போட்டி நிலவிவந்ததாகவும், காங்கிரஸுக்கு வாக்களிக்க வேண்டாம்
என்று அண்ணா ஹசாரே கேட்டுக்கொண்டது புதிய திருப்பம் என்றும் ஹரியானா
வட்டாரங்கள் தெரிவித்தன. அண்ணா ஹசாரே குழுவினர் பிரசாரம்
மேற்கொள்ளவில்லையெனினும் நான்தான் வெற்றிபெறுவேன். அண்ணா ஹசாரே குழுவினர்
காங்கிரஸுக்கு எதிராக மட்டும் பிரசாரம் மேற்கொள்ளவில்லை. அனைத்து ஊழல்
கட்சிகளுக்கு எதிராகவும்தான் பிரசாரம் மேற்கொண்டனர். எனவே நான் அண்ணா
ஹசாரேவால்தான் வெற்றிபெற்றேன் என்று கூறமுடியாது என குல்தீப் பிஷ்னோய்
கூறினார்.
No comments:
Post a Comment