|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

31 October, 2011

சிப்பந்திகள் நலனுக்காக ரூ.400 கோடியில் திட்டம்!


கப்பல் சிப்பந்திகளுக்கு வாழ்நாள் முழுவதும் பயனளிக்கும் வகையில், 400 கோடி ரூபாயில் திட்டம் ஒன்றை, கப்பல் துறை அமைச்சகம் தயாரித்து வருகிறது'' என, மத்திய கப்பல் துறை அமைச்சர் ஜி.கே.வாசன் கூறினார். சென்னைத் துறைமுகம் அருகேயுள்ள கடல் சிப்பந்திகள் கிளப்பில், கடல் சிப்பந்திகள், மாலுமிகளின் பணியைப் போற்றும் வகையில், மாலுமி மற்றும் சிப்பந்திகள் குடும்ப சிலைகள் திறப்பு விழா நேற்று நடந்தது. மத்திய கப்பல் துறை அமைச்சர் ஜி.கே.வாசன் பங்கேற்று, சிலைகளைத் திறந்து வைத்துப் பேசினார். துறைமுக தலைவர்கள் அதுல்யமிஸ்ரா (சென்னை), வேலுமணி (எண்ணூர்), கப்பல் மாலுமிகள் சங்க பொதுச்செயலர் அப்துல்கனி, உட்பட பலரும் பங்கேற்றனர். விழாவுக்குப் பின், ஜி.கே.வாசன் நிருபர்களிடம் கூறியதாவது:கடல் சிப்பந்திகள், மாலுமிகள் பணி போற்றுதற்குரியது. அவர்கள் வாழ்நாள் முழுவதும் பயன்பெறும் வகையில், பங்கீட்டு உதவித்தொகை வழங்க வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர். 2011 முதல் 2020 வரை, வாழ்நாள் உதவி வழங்க, 400 கோடி ரூபாய் செலவில் கருத்துரு ஒன்றை கப்பல் துறை அமைச்சகம் தயாரித்துள்ளது. விரைவில் இது செயல்படுத்தப்படும்.

நான்கு ஆண்டுகளில் நாட்டில் உள்ள பெரும் துறைமுகங்கள் அனைத்திலும், மாலுமிகள், சிப்பந்திகள் விடுதிகள் அமைப்பதோடு, ஏற்கனவே உள்ள விடுதிகள் சீரமைக்கப்படும். அயல்நாடுகளில் பணியாற்றிய, இந்திய கப்பல் சிப்பந்திகளுக்கு வழங்கப்படும், மாதம் 200 ரூபாய் ஓய்வூதியத்தை, 500 ரூபாயாக உயர்த்துவதோடு, சிப்பந்திகள் குடும்பத்தினரும் பயன்பெற வழிவகை செய்யப்படும்.கடற்கொள்ளையர்: சர்வதேச அளவில் நடந்து வரும் கடல் கொள்ளையர்களின் அச்சுறுத்தலில், இந்தியாவும் பாதிக்கப்பட்டுள்ளது. 

தாக்கப்பட்டு, கடல் கொள்ளையர்களிடம் சிக்கிய, இந்திய மாலுமிகள் மற்றும் சிப்பந்திகள் 400 பேர், பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.இன்னும் 50க்கும் மேற்பட்டவர்களை மீட்க, அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.சர்வதேச அளவில், ஐக்கிய நாடுகள் சபை ஒத்துழைப்போடு, கடல் கொள்ளை எதிர்ப்புப்படை அமைக்க இந்தியா முயற்சித்து வருகிறது.இவ்வாறு ஜி.கே.வாசன் கூறினார். 

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...