|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

31 October, 2011

காயத்தை தவிர்க்க வேகப்பந்து வீரர்களுக்கு சுழற்சி முறையில் வாய்ப்பு ஷேவாக்!

வேகப்பந்த வீரர்கள் அடிக்கடி காயம் அடைகிறார்கள். இதை தவிர்க்க சுழற்சி முறையில் வேகப்பந்து வீரர்களை தேர்வு செய்ய வேண்டும். காயத்தை தவிர்க்க ஒரே வழி இதுதான். வேகப்பந்து வீரர்களை அதிகமான போட்டிகளில் விளையாட அனுமதிக்க கூடாது. அதிகமான போட்டிகளில் ஆடுவதால் காயத்தால் பாதிக்கப்படுகிறார்கள். ஒரு முறை காயம் அடைந்தால் அதில் இருந்து குணமடைந்து மீண்டும் திரும்புவது என்பது கடினம். இங்கிலாந்து பயணத்தில் பெரும்பாலான வீரர்கள் காயம் அடைந்ததால் அணிக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டது. டெஸ்டுக்கு ஒரு அணி, ஒருநாள் போட்டிக்கு ஒரு அணி என்பது குறித்து முடிவு செய்வது தேர்வு குழுதான். கிரிக்கெட் வீரர் என்ற முறையில் என்னை பொறுத்தவரை நாட்டுக்காக ஆடுவதுதான் முக்கியம். நான் அணி நிர்வாகத்திடம் எதுவும் கேட்க மாட்டேன். டோனி ஓய்வு கேட்டும் அவருக்கு அணி நிர்வாகம் ஓய்வு வழங்கவில்லை.  பெரும்பாலான வீரர்கள் காயம் அடைந்ததால் அவருக்கு ஓய்வு கொடுக்கப்படவில்லை. தெண்டுல்கர் இடத்தை யாராலும் நிரப்ப இயலாது. அவருக்கு மாற்று வீரர் இல்லை. தெண்டுல்கர் மாதிரி நீண்ட காலம் யாராலும் சிறப்பாக ஆட முடியாது. இன்னொரு தெண்டுல்கரை காண முடியாது. தற்போதுள்ள இளம் வீரர்களில் வீராட் கோலி, ரெய்னா, ரகானே, ரோகித் சர்மா சிறப்பாக விளையாடுகிறார்கள். சீனியர் வீரர்கள் ஓய்வு பெற்றால் இளம் வீரர்கள் தங்களது பங்களிப்பை வெளிப்படுத்துவார்கள். இளம்வீரர்களின் திறமை மீது நம்பிக்கை இருக்கிறது’’என்றூ கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...