மலேசியாவில், வீடு வாங்க இந்தியர்களுக்கு
அந்நாட்டு அரசு அழைப்பு விடுத்துள்ளது.இதுகுறித்து பொதுத் துறையை சேர்ந்த
மலேசியா பிராப்பர்டி நிறுவனத்தின் துணைத் தலைவர் (முதலீட்டு மேம்பாட்டு
பிரிவு) ஆப்ரகாம் ஜேக்கப் கூறியதாவது:
தமிழகம், மலேசியா இடையிலான உறவு, பல்லாண்டு கால பாரம்பரிய சிறப்பினைக்
கொண்டது. மலேசியாவில், இந்தி யர்களின் முதலீடு அதிகரித்து வருகிறது. எனவே,
"மலேசியாவில் இரண்டாவது வீடு' என்ற பெயரில் பிரசாரம் செய்து வருகிறோம்.
இந்தியாவை சேர்ந்த 600 பேர் மலேசியாவில் நிலம் வாங்கி உள்ளனர். மலேசியாவில்
வீடு மற்றும் நிலங்களை வாங்கு வதற்கு டில்லி, மும்பை, லூதியானா ஆகிய
இடங்களில் உள்ள மக்கள் ஆர்வத்துடன் உள்ளனர். சென்னையைத் தொடர் ந்து, கோவை,
பெங்களூரு ஆகிய இடங்களிலும் பிரசாரம் மேற்கொள்ள உள்ளோம். இவ்வாறு அவர்
கூறினார்.
No comments:
Post a Comment