சென்னை மாநகராட்சியின் முதல் மேயர் என்ற பெருமையைப் பெறுகிறார் சைதை
துரைசாமி. தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திமுகவின் மா.சுப்பிரமணியத்தை விட
மிகப் பெரிய வாக்குவித்தியாசத்தில் சைதை துரைசாமி முன்னணியில்உள்ளார். மாலை
5 மணி நிலவரப்படி சைதை துரைசாமி 4,46,206 வாக்குகளுடன் முன்னணியில்
இருந்தார். திமுக வேட்பாளர் மா.சுப்பிரமணியம் 2,64,509 வாக்குகளுடன்
பின்தங்கியிருந்தார். சென்னை மாநகராட்சியை இதுவரை ஒருமுறை கூட
அதிமுக வென்றதில்லை. அதிகபட்சம் துணை மேயர் பதவியை மட்டுமே அக்கட்சி
வகித்துள்ளது. கடந்த பல காலமாகவே திமுக வசம்தான் இருந்து வருகிறது சென்னை
மாநகராட்சி.
இந்த நிலையில் முதல் முறையாக சென்னை மாநகராட்சி அதிமுக
கைக்குப் போகிறது. அதிமுக சார்பில் சென்னையின் முதல் மேயராகும் பெருமையைப்
பெறவுள்ளார் சைதை துரைசாமி. இதையடுத்து வாக்கு எண்ணப்பட்டு
முடிவுகள் அறிவிக்கப்பட்டு வரும் லயோலா கல்லூரி வளாகத்தில் அதிமுகவினர்
திருவிழாக் கோலம் பூண்டு காணப்பட்டனர். இறுதி முடிவு அறிவிக்கப்படாத
நிலையில், பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் அவர்கள்
கொண்டாடினர்.
No comments:
Post a Comment