|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

24 October, 2011

விக்கிலீக்ஸை முடக்க சிலர் சதி-தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது- அசாஞ்ச் அறிவிப்பு!


விக்கிலீக்ஸ் இணையதளத்தை முடக்க சிலர் சதி செய்வதாக கூறியுள்ள அதன் நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச் தற்காலிகாக தனது தளத்தின் செயல்பாடுகள் நிறுத்தி வைக்கப்படுவதாகவும் கூறியுள்ளார். அமெரிக்க தூதரகங்களுக்கும், அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்திற்கும் இடையிலான தகவல் பரிமாற்ற விவரங்களை வெளியிட்டு உலகையே உலுக்கிய இணையதளம் விக்கிலீக்ஸ். இதன் தலைவர் ஜூலியன் அசாஞ்ச். 

விக்கிலீக்ஸ் வெளியிட்ட பல பரபரப்புத் தகவல்களால் அமெரிக்காவில் மட்டுமல்லாமல் பல உலக நாடுகளிலும் பெரும் புயல் கிளம்பியது. இந்தநிலையில் தனது தளத்தின் செயல்பாடுகளை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அதன் நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று லண்டனில் செய்தியாளர்களிடம் கூறுகையில், எங்களுக்கு எதிராக அமெரிக்க மற்றும் இங்கிலாந்து வங்கிகள் நிதி கையாளுதலை தடை செய்துள்ளன. இதனால் எங்களது செயல்பாடுகளைத் தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தற்காலிகமாக எங்களது செயல்பாடுகள் நிறுத்தி வைக்கப்படுகின்றன. எதிர்கால பாதுகாப்பைக் கருத்தில் கொண்டும் இந்த முடிவை எடுத்துள்ளோம்.

எங்களது தளத்தை முடக்க சிலர் முயற்சிக்கின்றனர், சதி செய்கின்றனர். அதை நாங்கள் முறியடிப்போம், அவதூறுப் பிரசாரத்தை தவிடுபொடியாக்குவோம் என்றார் அவர். விக்கிலீக்ஸ் நிறுவனத்திற்கு நன்கொடை உள்ளிட்டவற்றை தங்களது மாஸ்டர் கார்டு, விசா கார்டு, பேபால் உள்ளிட்டவை மூலம் வழங்குவதற்கு அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தைச் சேர்ந்த பல முன்னணி வங்கிகள் தடை செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...