விடுதலைப்புலிகள்
இயக்கத்துக்காக நன்கொடை வசூலித்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில்,
நெதர்லாந்து நாட்டில் உள்ள 5 இலங்கை தமிழர்கள் மீது, ஹேக் நகரில் உள்ள
கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. இந்த
வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு 20 ஆண்டுகளுக்கு மேல் ஜெயில்
தண்டனை விதிக்கப்படும் என்றும், விடுதலைப்புலிகள் இயக்கம் தீவிரவாத இயக்கம்
என்று அறிவிக்கப்படும் என்றும் இலங்கை அரசின் தூண்டுதலால் தமிழர் விரோத
சக்திகள் வதந்தியை பரப்பி வந்தனர். ஆனால்,
அதற்கு நேர் மாறாக, விடுதலைப்புலிகள் அமைப்பு சர்வதேச தீவிரவாத இயக்கம்
அல்ல என்று, ஹேக் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. வரலாற்று சிறப்புமிக்க
இந்த தீர்ப்பில் நீதிபதி,
ஐரோப்பிய கொள்கைகளின் அடிப்படையில் விடுதலைப்புலிகளை பயங்கரவாதிகளாக கருத முடியாது. கடந்த 27 ஆண்டுகளாக அவர்கள் உள்நாட்டு போரில்தான் ஈடுபட்டு வந்தனரே தவிர, சர்வதேச ரீதியான போரில் ஈடுபட்டதில்லை. இதன்
மூலம் அவர்கள் மீது மனிதாபிமானத்துக்கு எதிரான குற்றச்சாட்டுகளை
சுமத்தலாமே தவிர அவர்களை பயங்கரவாதிகள் என்று கருத முடியாது’’என்று
தீர்ப்பு கூறினார்.
ஹேக்
நீதிமன்றம் அளித்துள்ள வரலாற்று சிறப்புமிக்க இந்த தீர்ப்பு குறித்து,
அமெரிக்காவில் இருந்து வெளியாகும் `வாஷிங்டன் போஸ்ட்' கருத்து தெரிவித்து
உள்ளது. அதில், இந்த தீர்ப்பு சர்வதேச ரீதியில் தாக்கத்தை ஏற்படுத்தும்
என்றும், இந்த தீர்ப்பின் அடிப்படையில், தங்கள் மீதான தடைகளை நீக்கிக்கொள்ள
விடுதலைப்புலிகள் முயற்சி செய்யலாம் என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது.
தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் மீது ஐரோப்பிய ஒன்றியம் விதித்த தடை தவறானது என்று, ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிராக ஏற்கனவே வழக்கு தொடர்ப்பட்டு உள்ளது. இந்த நிலையில், அந்த தடையை விரைவில் நீக்குவதற்கு முதல் படியாக, இந்த தீர்ப்பு பார்க்கப்படும் என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள்
இருப்பினும்,
விடுதலைப்புலிகளுக்கு பணம் திரட்டியதற்காக, குற்றம் சாட்டப்பட்ட 5
தமிழர்களுக்கும் 2 முதல் 6 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
பின்னர்
தீர்ப்பு பற்றி கருத்து தெரிவித்த வக்கீல் விக்டர் கோப்,
’’விடுதலைப்புலிகள், ஐரோப்பிய நாடுகள் ஒன்றியத்தின் பயங்கரவாதிகள்
பட்டியலில் இடம் பெறக்கூடாத இயக்கம் என்பதே தீர்ப்பின் அடிப்படை’’ என்று
விளக்கம் அளித்தார்.
குற்றம்
சாட்டப்பட்ட தமிழர்கள் சார்பில் ஆஜரான வக்கீல் விக்டர் கோப், ’’லிபிய
அதிபர் கடாபியை எதிர்த்து போரிட்ட விடுதலை போராளிகளுக்கு ஒப்பானவர்கள்,
விடுதலைப்புலிகள்’’ என்று வாதிட்டார்.
தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் மீது ஐரோப்பிய ஒன்றியம் விதித்த தடை தவறானது என்று, ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிராக ஏற்கனவே வழக்கு தொடர்ப்பட்டு உள்ளது. இந்த நிலையில், அந்த தடையை விரைவில் நீக்குவதற்கு முதல் படியாக, இந்த தீர்ப்பு பார்க்கப்படும் என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள்
அது பற்றி குறிப்பிட்ட நீதிபதி, ’’நெதர்லாந்து (டச்சு) சட்டப்படி விடுதலைப்புலிகள் இயக்கத்தை பயங்கரவாத இயக்கமாக வகைப்படுத்து முடியாது. எனினும், ஐரோப்பிய ஒன்றியம் விதித்துள்ள தடை இவர்களுக்கு பொருந்தும் என்பதால், விடுதலைப்புலிகளுக்காக அவர்கள் பணம் சேர்த்தது சட்ட விரோதமாகிறது’’ என்று கூறி இருக்கிறார்.
No comments:
Post a Comment