|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

24 October, 2011

எஸ்.எம்.எஸ்., கட்டுப்பாடு!


எஸ்.எம்.எஸ்.,' அனுப்புவதற்கு,"டிராய்' விதித்துள்ள புதிய கட்டுப்பாட்டால், மொபைல்போன் வாடிக்கையாளர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். ஆனால், பண்டிகைக் காலங்களில், இந்த கட்டுப்பாட்டை தளர்த்துவது, தனியார் மொபைல்போன் நிறுவனங்கள் கொள்ளை லாபம் அடிக்க உதவும் என பரவலாக புகார் எழுந்துள்ளது.

நாடு முழுவதும், 87 கோடி பேர், "மொபைல் போன்' பயன்படுத்தி வருவதாக, தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம்(டிராய்) தெரிவித்துள்ளது. இதில், 90 சதவீத இளைஞர்கள், "கால்'களுக்கு முன்னுரிமை கொடுப்பதைவிட, "குறுஞ்செய்தி' அதாவது "மெசேஜ்'க்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர் என, ஒரு ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. மொபைல்போன் சேவை நிறுவனங்களை தேர்வு செய்யும் போதே, குறைந்த செலவில், "பல்க் மெசேஜ்'களை அனுப்பும் வசதியை தரும், சேவை நிறுவனங்களையே தேர்வு செய்கின்றனர். துவக்கத்தில், வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க, ஒவ்வொரு தனியார் மொபைல் போன் நிறுவனங்களும், போட்டி போட்டு இலவச"மெசேஜ்' களை வாரி வழங்கின.  காதலர் தினம், நண்பர்கள் தினம், பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகைகளுக்கு, கடிதம் மற்றும் போனில் வாழ்த்துக்களை பரிமாறும் முறை குறைந்து, "மெசேஜ்' மூலம் வாழ்த்துத் தெரிவிக்கும் கலாசாரம் துவங்கியது.

பண்டிகை நேரத்தில், ஓட்டு மொத்தமாக அனுப்பும், "மெசேஜ்'களால், "நெட்வொர்க் ஜாம்' பிரச்னையை, சேவை நிறுவனங்கள் சந்தித்தன. இதை தவிர்க்க, இலவசமாக வழங்கிய, "மெசேஜ்'க்கு," மதிப்பு கூட்டுச் சேவையாக' மாற்றி, வாடிக்கையாளர்களிடம் கொள்ளை லாபம் அடித்தன. இருப்பினும், "மெசேஜ்' போதையில் விடுபடாத வாடிக்கையாளர்கள், கூடுதல் பணம் செலுத்தி அதையும் பெற்று வந்தனர்.இதனால் எழுந்த பிரச்னைகளை தொடர்ந்து, "பல்க் மெசேஜ்'களை அனுப்ப, "டிராய்' கட்டுப்பாடுகளை விதித்தது. இந்த கட்டுப்பாட்டின் படி, வாடிக்கையாளர்கள் நாளொன்றுக்கு 100 எஸ்.எம்.எஸ்.,க்கு மேல் அனுப்ப முடியாது. இந்த கட்டுப்பாடு, கடந்த செப்., 27 முதல் அமலுக்கு வந்தது. இந்த அறிவிப்பு, மொபைல்போன் வாடிக்கையாளர்களை கடுமையாக அதிருப்தியடைய செய்துள்ளது. 

இதுகுறித்து, மொபைல்போன் சில்லறை வியாபாரி அய்யப்பன் கூறும்போது, "எஸ்.எம்.எஸ்.,க்கு விதிக்கப்பட்ட புதிய கட்டுப்பாட்டால், வாடிக்கையாளர்கள் எங்களிடம் தகராறு செய்கின்றனர். முதலில், 27 ரூபாய் செலுத்தி, மாதம் ஒன்றுக்கு 6,000 எஸ்.எம்.எஸ்.,களை, பெற்று வந்தோம். தற்போது, அதே ரூபாய் செலுத்தினாலும், 100 எஸ்.எம்.எஸ்.,களுக்கு மேல் அனுப்ப முடிவதில்லை எனக் கேட்கின்றனர். இதனால்,"மெசேஜ் பூஸ்டர் பேக்'குகளை போடுவதை தவிர்க்கின்றனர்' என்றார்.மாவட்ட நுகர்வோர் தகவல் மைய ஒருங்கிணைப்பாளர் சடகோபன் கூறும்போது, ""டிராய்' அறிவிப்பை தனியார் மொபைல்போன் சேவை நிறுவனங்கள் தவறாக பயன்படுத்தி வருகின்றன. தற்போது, தனியார் மொபைல்போன் நிறுவனங்கள்,"தீபாவளி' நாளன்று மட்டும் அதிக மெசேஜ்களை அனுப்பலாம் என, தங்கள் வாடிக்கையாளர்களுக்கு தகவல்களை அனுப்பி வருகின்றன. இந்த அறிவிப்பு வாடிக்கையாளர்களிடம் இருந்து பணத்தை சுரண்டும் முயற்சியே. பண்டிகை காலங்களில், இக்கட்டுப்பாட்டை தனியார் மொபைல்போன் நிறுவனங்கள் தளர்த்திக் கொள்ளலாம் என,"டிராய்' அறிவித்ததாக தெரியவில்லை

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...