|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

01 November, 2011

தமிழ் சினிமாவுக்கு 80 வயது பூர்த்தியானது !

தமிழின் முதல் பேசும் சினிமா 'காளிதாஸ்' 1931ம் ஆண்டு தயாராகி வெளியானது. வட சென்னையில் முருகன் தியேட்டர் என்று அறியப்பட்ட கினிமா சென்ட்ரலில் இந்தப் படம் வெளியானது. டிபி ராஜலட்சுமி, பிஜி வெங்கடேசன், ராஜாம்பாள், சுசிலா தேவி, எல் வி பிரசாத், எம்எஸ் சந்தானலட்சுமி உள்ளிட்டோர் நடிக்க, மதுரகவி பாஸ்கர தாஸ் கதை, பாடல்கள், இசை ஆகியவற்றுக்குப் பொறுப்பேற்றிருந்தார். ஹெச் எம் ரெட்டி இயக்கினார். அர்தேஷ்ரி எம் இராணி தயாரித்த இந்தப் படம்அக்டோபர் 31ம் தேதி வெளியானது.  மும்பையில் தயாரான இந்தப் படத்தின் ரீல் பெட்டிகளை ரயிலில் சென்னை கொண்டுவந்த போது, ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடி மலர் தூவி, மேள தாளம், தாரை தப்பட்டை முழங்க, குதிரை வண்டியில் ஏற்றி ஊர்வலமாகக் கொண்டு போய் கொண்டாடினார்களாம். இந்த 80 வருட சினிமா சரித்திரத்தில் முதல் வெற்றிப் படம் என்ற பெருமையும் காளிதாசுக்கே உண்டு. சினிமா என்ற ஆச்சர்யம் தாங்காமல் ரசிகர்கள் திரும்பத் திரும்ப வந்து பார்த்தனர் இந்தப் படத்தை. இந்தப் படத்தில் பணியாற்றிய பலரும் பெரும் ஜாம்பவான்களாகத் திகழ்ந்தனர் பின்னாளில். எல் வி பிரசாத் பெரிய சினிமா சாம்ராஜ்யத்தையே நிறுவினார். தமிழ் சினிமா உள்ளவரை நிலைத்திருக்கும் படமாக மாறிவிட்டது காளிதாஸ்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...