இந்தியாவின் முதல் கல்வி அமைச்சரான மவுலான அபுல் கலாம் ஆசாத்தின் பிறந்த
நாளான இன்று, கல்வி உரிமை நாளாக கொண்டாட, மத்திய மனித வள மேம்பாடு மற்றும்
தகவல் தொழில் நுட்ப அமைச்சர் கபில் சிபல் உத்தரவிட்டுள்ளார். பள்ளி
தலைமையாசிரியர்களுக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் மவுலான அபுல் கலாம் ஆசாத், விடுதலை
இந்தியாவில் கல்வி பயிற்று முறையான அடித்தளமிட்டவர். அவரது பிறந்த நாளை
கல்வி உரிமை நாளாக இன்று கொண்டாட வேண்டும். கல்வி உரிமையில் செய்ய
வேண்டியவை குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. இதை காலை இறைவணக்க கூட்டத்தில்,
ஒரு மாணவனை வாசிக்க செய்து, அனைத்து மாணவர்களும் கேட்கும் படி செய்ய
வேண்டும். இதில் மாணவர்கள், ஆசிரியர்கள், பள்ளி நிர்வாக உறுப்பினர்கள்,
ஊராட்சி உறுப்பினர்கள், பெற்றோர்களையும் பங்கு பெற செய்ய வேண்டும், என
தெரிவித்துள்ளார். மாணவர் வாசிக்க வேண்டிய தகவல்:
* குழந்தைகளை அடிக்கவோ திட்டவோ கூடாது, அவர்களுடன் நயந்து பழக வேண்டும்.
பெண் குழந்தைகள் , பிற்பட்ட வகுப்பினர், பொருளாதாரத்தில் பின் தங்கியவர் என பாகுபாடு காட்ட கூடாது.
*பள்ளியை சரியான நேரத்திற்கு திறக்க வேண்டும். ஆசிரியர்கள் சரியான நேரத்திற்கு வர வேண்டும். விதி முறைகளின் படி கால அளவை கடைபிடிக்க வேண்டும்.
*எந்த குழந்தையையும் பள்ளியில் சேர்க்காமல் நிராகரிக்க கூடாது. பள்ளியை விட்டு நீக்கவும் கூடாது. அனைவரும் தேர்ச்சி பெற வேண்டும்.
*தேர்வு திட்டமானது குழந்தைகளை பயமுறுத்தாமல் ஊக்குவிக்கும் வகையில் இருக்க வேண்டும்.குழந்தைகளின் அறிவாற்றலை முழுமையாக , தெளிவாக மதிப்பிட தகுந்த வகையில் இருக்க வேண்டும்.
*பள்ளி நிர்வாகத்தின் விதி முறைகளை முறையாக பின்பற்ற வேண்டும்.
*ஒவ்வொரு பள்ளியிலும் உடற்பயிற்சிகூடம், சுத்தமான குடி நீர், கழிப்பறை வசதிகளை உருவாக்கி கொடுக்க வேண்டியது கல்வி அமைச்சகத்தின் பொறுப்பு. பள்ளியுடன் நீங்களும் கலந்து ஆலோசித்து, தேவையான திட்டங்களை வரையறுத்து, கல்வி அமைச்சகத்துக்கு சமர்ப்பிக்க வேண்டும்.

No comments:
Post a Comment