|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

12 November, 2011

சபரிமலை வழிபாடு கட்டணத்தில் தேவசம்போர்டு பெரும் மாற்றம்!

சபரிமலை வழிபாடு கட்டணத்தில் திருவிதாங்கூர் தேவசம்போர்டு பெரும் மாற்றம் செய்துள்ளது. புதிய கட்டணத்தில் படிபூஜை 50 ஆயிரம் ரூபாயாக அதிகரித்துள்ளது. அப்பம், அரவணை பிரசாத கட்டணமும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

சபரிமலையில் மண்டல சீசன் தொடங்க இன்னும் நான்கு நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. வரும் சீசனில் வழிபாடு கட்டணங்களும் அதிகரிக்கப்பட்டு உள்ளது. புதிய கட்டண விபரங்கள் வருமாறு. பழைய கட்டணம் அடைப்புக்குறிக்குள் கொடுக்கப்பட்டுள்ளது. அபிஷேக நெய்- 50 (40), நெய் அபிஷேகம் 10, (5), அப்பம் ஒரு பாக்கெட் 25 (20), அரவணை 60 (50) அஷ்டாபிஷேகம் 2000 (1500), அஷ்டோத்தர அர்ச்சனை 20 (15), ஐயப்ப சக்கரம் 120 (100) , பகவதி சேவை 1000 (800), சோறு ஊட்டு 100 (61), கணபதிஹோமம் 200 (160), களபாபிஷேகம் 3000 (2000) , லட்சார்ச்சனை 4000 (3000), மலர் நிவேத்யம் 15 (3) மலவடிபூஜை 15 (4), மஞ்சள் குங்குமம் 25 (10), முழுக்காப்பு 500 (301), நாகராஜா பூஜை 25 (15), நாமகரணம் 70 (61), நவக்கிரகபூஜை 100 (61), நீராஞ்சனம் 75 (61), நெய்விளக்கு 15 (3). நித்யபூஜை 2501 (2501), படிபூஜை 50,000 (30,000), பஞ்சாமிர்தம் 20 (5), பஞ்சாமிர்தம் 100 மில்லி 50 (30), பறையடி 120 (100), பூஜித்த விளக்கு 100 (50), பூஜித்த மணி 70 (40), புஷ்பாபிஷேகம் 2000 (1500), சகஸ்ரகலசம் 25,000 (19,000),தங்க ஆபரணபூஜை 20 (10), சகஸ்ரநாம அர்ச்சனை 20 (15), தங்க அங்கி சார்த்து 7500, துலா பாரம் 100 (61), உச்சபூஜை 2001 (2001), உடையாடை சார்த்து 15 (10), உடையாடை நடைக்கு வைத்தல் 15 (10), உதயாஸ்தமன பூஜை 30,000 (20,001), உற்சவபலி 15,000 ( 5001), உஷபூஜை 501 (501), வல்சம் நிவேத்யம் 25 (15),வர நிவேத்யம் 15 (10), வெள்ளி அங்கி சார்த்து 4000 (2501), விபூதி பிரசாதம் 15 (10), எழுத்து தொடங்கி வைத்தல் 101 (101).பம்பை தேவசம்: கணபதிஹோமம் 100 (61), புஷ்பாபிஷேகம் (புதிய கட்டணம்)1500, அவல் நிவேத்யம் 20 (10), இருமுடி கட்டு கட்டுதல் 160 (200), மோதகம் 25 (15), வடைமாலை 150 (65).

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...