இலங்கை தலைநகர் கொழும்புக்கும் - தூத்துக்குடிக்கும் இடையிலான கப்பல் போக்குவரத்து சேவையில் ஈடுபட்டு வந்த எம்.டி. ஸ்கோஷியா பிரின்ஸ் கப்பலை, கொழும்பு துறைமுகத்தில் தடுத்து வைக்குமாறு கொழும்பு கோர்ட் உத்தரவிட்டுள்ளது. கொழும்பு 3ல் அமைந்துள்ள நிறுவனம் ஒன்றின் சார்பில் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எம்.ஏ. இராசிக் அன் கம்பெனி லிமிடெட் என்ற நிறுவனத்தினர் இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தனர்
இந்த கப்பலுக்கு கடந்த அக்டோபர் மாதமும், இம்மாதமும் தாம் 478,173.23 அமெரிக்க டாலர்கள் மதிப்பிற்கு எரிபொருட்களை வழங்கியதாகவும், அதற்குரிய பணத்தினை இந்த கப்பலை சேவையில் ஈடுபடுத்தி வரும் நிறுவனம் வழங்கவில்லையென்றும், இந்தப் பணத்தினைப் பெற்றுத்தர வேண்டுமெனக் கோரியே இந்த வழக்கினை குறித்த நிறுவனம் தாக்கல் செய்திருந்தது. இந்த கப்பல் சேவையினை, மும்பையில் உள்ள பிளமிங்கோ நிறுவனமே நடத்தி வந்தது. இந்த நிறுவனத்துக்கு எதிராகவே வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. நீதிபதி டபிள்யூ.பி.டி.எல். ஜெயதிலக முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது முத்த வக்கீல் கே. பூபாலசிங்கத்தின் உதவியுடன் வக்கீல் தமயந்தி பிரான்சிஸ் மனுதாரர் சார்பில் ஆஜரானார். மனுதாரர் தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி எம்.ரி. ஸ்கோட்டியா பிரின்ஸ் என்ற கப்பபை தடுத்து வைக்குமாறு துறைமுக அதிகார சபைக்கு உத்தரவிட்டதுடன் வழக்கு விசாரணையினை, டிசம்பர் 7ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
No comments:
Post a Comment