சென்சார் போர்டு தணிக்கை செய்து தடை செய்யப்பட்ட படங்களின் எண்ணிக்கை தொடர்பாக லக்னோவைச் சேர்ந்த அமிதாப் மற்றும் நூதன் தாக்குர் ஆகியோர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் தகவல்களைப் பெற்றுள்ளனர். அதில், 2001-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை 256 திரைப்படங்களுக்கு சென்சார் போர்டு சான்றிதழ் வழங்க மறுத்தது தெரியவந்துள்ளது. அதிகபட்சமாக 2006-ம் ஆண்டு 59 படங்களுக்கு சான்றிதழ் மறுக்கப்பட்டிருக்கிறது. 2002-ல் 33 படங்களுக்கும், 2004-ல் 31 படங்களுக்கும், 2010-ல் 9 படங்களுக்கும் சான்றிதழ் வழங்கப்படவில்லை. 2001-ம் ஆண்டு தணிக்கைக்குச் சென்ற 19 படங்களுக்கும் சான்றிதழ் கொடுக்கப்படவில்லை. இந்த காலகட்டத்தில் 78 இந்திப் படங்களும், 52 ஆங்கிலப் படங்களும் தடை பெற்றிருக்கின்றன. தென்னிந்திய சினிமாக்களில் தமிழ்ப் படங்கள்தான் அதிகம் தடை செய்யப்பட்டிருக்கின்றன. அதிக அளவில் ஆபாச காட்சிகள் இடம்பெற்றிருந்தால் 51 தமிழ் படங்களுக்கு சென்சார் போர்டு சான்றிதழ் மறுக்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து 33 கன்னட படங்களுக்கும், 15 தெலுங்கு படங்களுக்கும், 14 மலையாளப் படங்களுக்கும் தணிக்கைச் சான்றிதழ் மறுக்கப்பட்டிருக்கிறது.
No comments:
Post a Comment