ஒளிப்பதிவு சட்டத்தை மறு ஆய்வு செய்ய தனி குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த குழுவின் பரிந்துரைகள் வெளியாகும்போது மாநில அரசுகள் திரைப்படத்தை தடை செய்ய முடியாது எனவும் மத்திய அமைச்சர் மணிஷ் திவாரி தெரிவித்தார். மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புதுறை அமைச்சர் மணிஷ் திவாரி, சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று அளித்த பேட்டி: தமிழகத்தில் 'விஸ்வரூபம்' படத்திற்கு தடை விதிக்கப்பட்ட விவகாரம் துரதிருஷ்டவசமானது. மத்திய தணிக்கை குழு படத்தை பார்த்து திரையிடலாம் என்று ஒப்புதல் கொடுத்த பிறகு, மாநில அரசு தடை விதிக்க முடியாது. இதேபோல் ஒவ்வொரு படத்திற்கும் தடை விதித்தால், ஒவ்வொரு பட தயாரிப்பாளர்களும், மத தலைவர்களை அழைத்து படத்தை காட்டிவிட்டுதான் வெளியிடவேண்டிய நிலை வரும். எனவே, 1956ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட ஒளிப்பதிவு சட்டம் மறு ஆய்வு செய்யப்படும். இதற்காக தனியாக குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவின் பரிந்துரைகள் வெளியாகும்போது திரைப்படங்களை மாநில அரசுகள் தடை செய்ய முடியது. அரசு கேபிள் டிவி கார்ப்பரேஷனுக்கு உரிய அனுமதி வழங்காமல் மத்திய அரசு தடை விதித்துவிட்டது என்று தமிழக அரசு கூறுவது தவறானது. அரசின் கேபிள் டிவி கார்ப்பரேஷன் லைசன்சை ரத்து செய்யவும் இல்லை, கைவிடவும் இல்லை. லைசென்ஸ் விவகாரம் நிலைகுழுவின் ஆய்வில் உள்ளது. நிலைக்குழு தான் இது குறித்து முடிவு செய்யும்.
No comments:
Post a Comment