ஜப்பானில் உள்ள கடலில் இஸ்குயிட் வகை மீன்கள் ஆபத்து காலங்களில் கடல் நீரில் இருந்து சுமார் 100 அடி வரை காற்றில் பறந்து தங்களை எதிரிகளிடம் இருந்து காப்பாற்றி கொள்கிறது என்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். பொதுவாகவே மீன்கள் நீரில் வாழ்பவை. அனால் அரிதாக சில மீன்கள் தங்களை பாதுகாத்து கொள்வதற்காக சில மீட்டர் தூரம் நீரில் இருந்து துள்ளி தப்பித்து கொள்ளும். ஆனால் இஸ்குயிட் என்ற இந்த மீன் இனங்கள் தண்ணீரில் இருந்து சுமார் 100 அடி வரை காற்றில் பறந்து தங்களை எதிரிகளிடம் இருந்து காப்பாற்றி கொள்கிறது என்பதை ஜப்பான் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். அதுவும் வினாடிக்கு 36 அடி வேகத்தில் பறக்கின்றன. காற்றில் 3 வினாடிகள் வரை மட்டுமே இருக்கும் இந்த மீன்கள் , அந்த 3 வினாடிக்குள் வெகு தூரம் அல்லது வெகு உயரம் மின்னல் வேகத்தில் பறந்து தங்களை எதிரிகளிடம் இருந்து காப்பாற்றி கொள்கிறது. இது விஞ்ஞானிகளுக்கு புதிய தகவலாகவும், இந்த மீன் இனத்தை பற்றி ஆராய மேலும் உதவும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment