ஏதோ ஆசைக்கு ஒரு படம் நடிக்க வந்தார் பைனான்சியல் புரோக்கராக இருந்த சீனிவாசன். வெறும் நடிகர் மட்டும் என்றால் நல்லாருக்காதே என்ற எண்ணத்தில், ஒரு உதவி இயக்குநரைப் பிடித்து, கதை திரைக்கதை வசனம் இயக்கம் என அனைத்துப் பொறுப்புகளையும் அவர் தலையில் சுமத்தி, தன் பெயரைப் போட்டுக் கொண்டார். இதைக் கேட்ட போது, ஆமா காசு கொடுத்தேன்... அந்தப் பையன் ஓகேன்னான்.. நான் இயக்குநராகிட்டேன். இதிலென்ன தப்பு என்று திருப்பிக்கேட்டார் சீனிவாசன். சீரியஸான காமெடி பீஸாக வலம் சீனிவாசனுக்கு மீடியாக்கள் தந்த முக்கியத்துவம் காரணமாக, பிரபல இயக்குநர்களின் படங்களில் காமெடியனாக ஒப்பந்தம் செய்யப்பட்டார் சீனிவாசன். அதில் கண்ணா லட்டு தின்ன ஆசையா படம் குருட்டாம் போக்கில் ஓடிவிட, இப்போது அவருக்கு புதிய மவுசு. ஏகப்பட்ட புதிய படங்களில் ஒரு பாடலுக்கு அல்லது காமெடியனாக அவரை ஒப்பந்தம் செய்து வருகின்றனர். இந்த ஒரே படத்தில் தனது சம்பளத்தை ஒரு கோடியாக உயர்த்திவிட்டார் சீனிவாசன். காரணம் கேட்டால், "ஆமாங்க... இந்த நிலைமைக்கு வர நான் நிறைய இன்வெஸ்ட் பண்ணிட்டேன். அதையெல்லாம் இனிமேதானே திரும்ப எடுக்கணும். அதான் சம்பளத்தை 1 கோடியாக உயர்த்திவிட்டேன். என் குரு சூப்பர் ஸ்டார் ரஜினிதான். அவரே என் படத்தைப் பார்த்து பவர் பட்டையைக் கிளப்பிட்டீங்க என்றார். இது எனக்குக் கிடைச்ச மிகப் பெரிய விருது," என்றார்.
No comments:
Post a Comment