ராஜபக்சேவின் இந்திய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் போராட்டம் நடத்திய வைகோ, நேற்றிரவு சென்னை திரும்பினார். அப்போது விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ,இலங்கை அதிபர் ராஜபக்சேவிற்கு எதிரான தங்களது போராட்டம் தொடரும் என்று கூறினார். திமுகா உடன் கூட்டணியா? இலங்கை பிரச்னையில் அனைத்து கட்சிகளும் இணைந்து போராட வேண்டும் என்ற திமுக தலைவர் கருணாநிதியின் கருத்து பற்றிய கேள்விக்கு பதிலளித்த அவர், திமுகவோடு கை கோர்க்கும் பேச்சுக்கே இடமில்லை என்று தெரிவித்தார். இலங்கையில் இனப்படுகொலை நடந்த போது அதை தடுக்காத கருணாநிதி இப்போது ராஜபக்சேவை எதிர்ப்பது போல நாடகம் போடுகிறார் என்று வைகோ குற்றம் சாட்டினார்.
No comments:
Post a Comment