அமெரிக்காவின் புகழ்பெற்ற டைம்ஸ் இதழில், உலகின் டாப்-25 விளையாட்டு
சம்பந்தப்பட்ட படங்களில், இந்தியாவின் "லகான்" படமும்
இடம்பிடித்திருக்கிறது. கடந்த 2001ம் ஆண்டு அமீர்கானின் தயாரிப்பு மற்றும்
நடிப்பில் வெளிவந்த "லகான்" படத்தை, அசுதோஷ் குவாரிகர் இயக்கியிருந்தார்.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து இருந்தார். கிரிக்கெட்டை மையப்படுத்தி வெளிவந்த
இப்படம் மாபெரும் வெற்றி பெற்றதோடு, ஆஸ்கர் விருது பட்டியலில் சிறந்த
வெளிநாட்டு பட வரிசையில், இறுதிச் சுற்று வரை முன்னேறியது.
இந்நிலையில்
உலகப் புகழ்பெற்ற டைம்ஸ் நாளிதழ், விளையாட்டை மையப்படுத்தி வெளிவந்த
டாப்-25 படங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவில் இருந்து
அமீர்கான் நடித்த லகான் படமும் இடம்பெற்றுள்ளது. லகான் படத்திற்கு 14வது
இடத்தை வழங்கியிருக்கும் டைம்ஸ் நாளிதழ், படத்தின் இயக்குநர் அசுதோஷ்
குவாரிகர் மற்றும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகிய இருவரையும் வெகுவாக
பாராட்டியுள்ளது.
இந்தபட்டியலில் 1998ம் ஆண்டு வெளிவந்த தி பிக்
லெபோவ்ஸ்கி முதலிடத்தையும், பாடி அன்ட் சோல்(1947), ப்ரேகிங் அவே(1979),
புல் தர்ஹாம்(1988), கேடிசேக்(1980) போன்ற படங்கள் அடுத்தடுத்த படங்களை
பிடித்துள்ளன.
No comments:
Post a Comment