நமது படைப்புகள், கண்டுபிடிப்புகளின் பயனை மற்றொருவர் அறுவடை செய்யாமல்,
அதற்கான உரிமையை உரியவர் பெற்றிருப்பதே அறிவுசார் சொத்துரிமை
எனப்படுகிறது. அறிவுசார் சொத்துரிமை
பாதுகாப்புக்கு சட்டம் வழி வகை செய்வதால், இதுதொடர்பான படிப்பும்
சட்டத்தில் ஒன்றாகவே இருக்கிறது. ஆயினும் பல்வேறு கல்வி நிறுவனங்களும்
தனியாக இப்படிப்பை வழங்குகின்றன. கவிதை, கதை, கட்டுரை போன்ற இலக்கியங்கள், அறிவியல் கண்டுபிடிப்புகள்,
வேளாண்மை மற்றும் தொழில்சார் கண்டுபிடிப்புகள், திரைப்படம்,
புகைப்படங்கள், உள்ளிட்டவை அறிவுசார் சொத்துரிமைக்கு எடுத்துக்காட்டுகள்.
எல்லா படைப்புகளையும் அறிவுசார் சொத்துரிமையின் கீழ் பாதுகாக்க முடியும். நிறுவனத்தின் பெயர், எழுத்தின் வடிவமைப்பு, லோகோ, பாடல், ஒலி போன்றவை
ஒரு நிறுவனத்தின் வர்த்தகக் குறியீடாக இருக்கலாம். இவற்றை வேறு நபர்கள்
அனுமதியின்றியும், முறைகேடாகவும் பயன்படுத்துவதைத் தவிர்க்க காப்புரிமை
செய்து கொள்ளலாம். காப்புரிமை என்பது, தனிமனிதர் அல்லது நிறுவனத்துக்கு படைப்பு அல்லது கண்டுபிடிப்புக்கு அரசு வழங்கும் உரிமம் ஆகும்.
பதிப்புரிமை என்பது புத்தகம், இலக்கியம், படைப்புகள் போன்றவற்றுக்கு
குறிப்பிட்ட காலத்துக்கு அரசு வழங்கும் உரிமம் ஆகும். வண்ணம், வடிவம்,
அளவு, எழுத்தமைப்பு உள்ளிட்டவற்றைக் கூட பதிவு செய்து கொள்ள முடியும்.இதுதொடர்பான வேலைவாய்ப்புகளை மென்பொருள் நிறுவனங்கள், சட்டக்குழுக்கள்,
வேகமாக விற்பனையாகும் நுகர்பொருள் தயாரிப்பு நிறுவனங்கள், மருந்து உற்பத்தி
நிறுவனங்கள், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், நிறுவனங்கள், வேளாண்
தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பெறமுடியும். இத்துறை சார்ந்து இன்டெலெக்சுவல் பிராப்பர்டி ரைட்ஸ் முதுகலை டிப்ளமோ,
பேடண்ட் பேசிக்ஸ் அன்ட் இன்ட்ரொடக்ணன் - ஐபிஆர், பேடண்ட் லிடிகேஷன், சைபர்
லா அன்ட் இன்டலெக்சுவல் பிராப்பர்டி ரைட்ஸ், இன்டலெக்சுவல் பிராப்பர்டி லா,
ஐபிஆர் சான்றிதழ் படிப்பு போன்ற படிப்புகள் வழங்கப்படுகின்றன.
இப்படிப்புகளை வழங்கும் நிறுவனங்கள்: பாலாஜி லா காலேஜ், புனே
பயோ இன்பர்மேடிக்ஸ் இன்ஸ்டிடியூட்ஸ் ஆப் இந்தியா, நொய்டா
இந்திராகாந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகம், டெல்லி,
எம்.எஸ். ராமைய்யா சட்டக் கல்லூரி, பெங்களூரூ
சிம்போசிஸ் சொசைட்டிஸ் சட்டக் கல்லூரி, புனே
No comments:
Post a Comment