வருமான வரி ஏய்ப்பு செய்து, சட்டத்திற்கு புறம்பாக கோடிக்கணக்கான
ரூபாய்களை வெளிநாட்டு வங்கிகளில் முடக்கியுள்ளவர்கள் எண்ணிக்கை அதிகளவில்
உள்ளது. இவர்களை பற்றிய தகவல்களை வெளியிடக்கோரி, சுப்ரீம் கோர்ட்டில்
வழக்கு நடக்கிறது. இந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதிகள், கறுப்புப் பணத்தை
வெளிநாடுகளில் முடக்கியுள்ளவர்கள் பற்றி தகவல்கள் பெற அரசு என்ன நடவடிக்கை
எடுத்து இருக்கிறது. வெளிநாடுகளுடன் தொடர்பு கொண்டு இது பற்றிய தகவல்களை
அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு இருந்தது.
மொரீஷியஸ், பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகள் போன்ற சில நாடுகள், வெளிநாட்டு
முதலீடுகளை கவர்வதற்காக பல சலுகைகளை வழங்கின. இந்த வாய்ப்பை பயன்படுத்தி,
பலர், சட்டத்திற்கு புறம்பாக தாங்கள் ஈட்டிய வருவாயை அந்த நாடுகளில்
முதலீடு செய்தனர். இந்த வகையில், கோடிக்கணக்கான கறுப்புப் பணம
இந்தியாவுக்கு வெளியே முதலீடு செய்யப்பட்டது.
இந்நிலையில், வெளிநாடுகளில் செய்யப்பட்டுள்ள முதலீடுகள் பற்றிய
விவரங்களை அளிப்பது அந்நாடுகளிலிருந்து பெறுவதற்காக, பல்வேறு நாடுகளுடன்
மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. வரி ஏய்ப்பு செய்துள்ளவர்கள்
தகவல்களையும், அவர்களின் வங்கிக் கணக்குகளை அளிக்க வேண்டும் என இந்தியா
உரிய சட்ட நடைமுறைகளின்படி கோரியது.தொடர்ந்து நடத்திய பேச்சுவார்த்தையின்
பயனாக, ஆஸ்திரியா, பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகள் உட்பட சில நாடுகள், இந்தியா
கோரும் தகவல்களை அளிக்க முன்வந்துள்ளன. இதற்காக இந்த நாடுகள், வரி
தொடர்பான சட்டங்களை திருத்த முன்வந்துள்ளன.
இந்தியா போன்ற சில நாடுகள் கேட்கும் வரி தொடர்பான தகவல்கள், வங்கி
தகவல்களை பரிமாறிக்கொள்ள முன்வந்துள்ளன. வரி தொடர்பான தகவல்களை
பரிமாறிக்கொள்ளும் வெளிப்படையான உலக அமைப்பு உள்ளது. இதில் இந்தியா
உறுப்பினராக உள்ளது. இது பாரிஸ் நகரிலுள்ள,"பொருளாதார ஒத்துழைப்பு மற்றும்
வளர்ச்சி' அமைப்பின் கீழ் வருகிறது.இந்த அமைப்பில் உறுப்பினர்களாக உள்ள
நாடுகள், கேட்கும் வரிதொடர்பான தகவல்கள் மற்றும் வங்கி தகவல்களை அளிக்க
வேண்டும் என்பது ஒப்பந்தம் ஆகும். இதற்காக, தங்கள் நாட்டில் வரிதொடர்பான
சட்ட திட்டங்களில் திருத்தம் செய்ய பல நாடுகள் முன்வந்துள்ளன.
மத்திய நேரடி வரிகளுக்கான வாரியத்தின் கீழ் உள்ள வெளிநாட்டு வரி பிரிவு,
வரி தொடர்பான தகவல்களை பரிமாறிக்கொள்ளும் வகையிலும், இரட்டை வரி தவிர்ப்பு
ஒப்பந்தம் ஆகியவற்றை செய்துள்ளன.இதன் அடிப்படையில் பெல்ஜியம், ஆஸ்திரியா
போன்ற நாடுகள் தகவல்களை அளிக்க முன்வந்துள்ளன.
No comments:
Post a Comment