|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

26 September, 2011

உருவியதால் ஒதுக்கப்பட்ட தமிழ்படங்கள்...!




2011-ம் ஆண்டிற்கான பிராந்திய மொழி படங்களுக்குரிய ஆஸ்கார் விருது செலக்ஷ்னுக்கு, 16 இந்‌திய மொழிபடங்களை செலக்ஷ்ன் செய்து, திரையிட்டு பார்த்தது ஃபிலிம் பெடரேஷன் ஆஃப் இந்தியா. அதில் ஆறு இந்தி படங்களும், ஐந்து தமிழ் படங்களும், இரண்டு மலையாள படங்களும், ஒரு தெலுங்கு, ஒரு மராத்தி, ஒரு பெங்காலி படமும் அடக்கம். இதில் முதல் இரண்டு இடங்களை மலையாள படங்கள் இரண்டும் பிடித்தன. அ‌தாமின்டே மகன் அபு, உருமி இந்த இரண்டு படங்களில் ஆதாமின்டே மகன் அபு படம்தான் இந்தியாவில் இருந்து ஆஸ்கருக்கு அனுப்பப்பட்ட படமாகும்.செலக்ஷ்னுக்கு சென்ற எந்திரன், கோ, தெய்வத்திருமகள், முரண், ஆடுகளம் உள்ளிட்ட ஐந்து தமிழ் படங்களிலும், ஹாலிவுட் படங்களில் இருந்து நிறைய சீன்களும், அதில் சில படங்களின் கதைகளமும் உருவப்பட்டிருந்தது அப்பட்டமாக தெரிந்ததால், அந்த 5 படங்களும் பேக்-டூ-தி ‌பெவிலியன் ஆகிவிட்டதாம். இப்படி சொன்னார்கள் ஆஸ்கர் பரிந்துரைக்கான, ஃபிலிம் பெடரேஷன் ஆஃப் இந்தியா குழுவில் இருந்த எல்.சுரேஷ், கங்கை அமரன் உள்ளிட்ட தமிழ் சினிமா பிரபலங்கள்.

இந்த விஷயம், தமிழ் சினிமாவை தங்களது சட்டை பாக்கெட்டுக்குள் ‌வைத்திருப்பதாக பேசிவரும் இன்றைய இளம் இயக்குநர்களுக்கு தெரியுமா...!

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...