ஃபார்முலா 1 கார் பந்தயம் முதன்முதலாக இந்தியாவில் நடக்கிறது. இதனால் கார் பந்தய ரசிகர்கள் குஷியாகியுள்ளனர். ஃபார்முலா
1 கார் பந்தயம் முதன்முதலாக இந்தியாவில் அதுவும் உத்தர பிரதேச மாநிலம்
கிரேட்டர் நொய்டாவில் புதிதாக கட்டப்பட்டுள்ள புத் சர்வதேச சர்க்கியூட்டில்
நடக்கிறது. இன்று காலை 10 மணிக்கு பயிற்சி பந்தயம் துவங்கியது. இத்தனை
ஆண்டுகளாக ஃபார்முலா 1 கார் பந்தயம் பார்க்க வேண்டும் என்றால் இந்தியர்கள்
வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டியிருந்தது. ஆனால் இந்த ஆண்டு உத்தர பிரதேச
மாநிலம் கிரேடட்ர் நொய்டாவில் உள்ள புத் சர்வதேச சர்க்கியூட்டில்
நடக்கிறது. இன்றும், நாளையும் பயிற்சி பந்தயம் நடக்கிறது. நாளை மறுநாள்
பந்தயம் துவங்குகிறது.
புத் சர்வேதச சர்க்கியூட் பற்றி பார்ப்போம்,
புத்
சர்வேதச சர்க்கியூட் தான் ஃபார்முலா 1 பந்தயத்திற்காக இந்தியாவில்
கட்டப்பட்ட முதல் சர்க்கியூட் ஆகும். இந்த சர்க்கியூட் 875 ஏக்கர்
நிலத்தில் 10 பில்லியன் டாலர் செலவில் கட்டப்பட்டுள்ளது. இதை ஜெர்மனியைச்
சேர்ந்த பிரபல எஃப்1 டிராக் என்ஜினியரான ஹெர்மன் டில்கே வடிவமைத்துள்ளார்.
இங்கு பந்தயத்தில் கலந்துகொள்ளும் கார்கள் மணிக்கு 210 கிமீ முதல்
அதிகபட்சமாக 320 கிமீ வரை செல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஜேபீ
குரூப் சர்க்கியூட் என்று பெயரிடப்பட்டதை தான் கடந்த ஏப்ரல் மாதம் புத்
சர்வதேச சர்க்கியூட் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. புத்தரின்
நியாபகார்த்தமாக புத் என்று பெயரிடப்பட்டுள்ளது. இது கௌதம் புத்தா நகரில்
அமைந்துள்ளது. இந்த பந்தயம் குறித்து இந்திய கார் பந்தய வீரரான நரேன் கார்த்திகேயன் கூறியதாவது,
இந்தியாவில்
நடக்கும் கார் பந்தயத்தில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைக்கும் என்று நான்
நினைத்துக் கூட பார்த்ததில்லை. என் நாட்டு மக்கள் முன்பு கார் ஓட்ட
வேண்டும் என்ற எனது கனவு நனவாகப் போகிறது. டிராக் அருமையாக உள்ளது என்றார்.
No comments:
Post a Comment