அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் இன்று மாலை நடக்க உள்ள தீபாவளி நிகழ்ச்சியில் அதிபர் பராக் ஒபாமா கலந்து கொள்கிறார். முன்னாள்
அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் ஆட்சிக் காலத்தில் வெள்ளை மாளிகையில் உள்ள
ஈஸ்சன்ஹேவர் நிர்வாக அலுவலக கட்டிடத்தில் தீபாவளி நிகழ்ச்சி கொண்டாடுவது
துவக்கப்பட்டது. கடந்தாண்டு அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இந்தியாவில்
இருந்தார். இதனால் மும்பை நகரில் ஒபாமா தீபாவளியை கொண்டாடினார். இந்தாண்டு
தீபாவளி நிகழ்ச்சி இன்று மாலை வெள்ளை மாளிகையில் நடக்க உள்ளது. இதில்
ஒபாமா கலந்து கொள்ள உள்ளார். வெள்ளை மாளிகையில் நடக்கும் தீபாவளி
நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் முதல் அமெரிக்க அதிபர், ஒபாமா என்பது
குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து ஒபாமா கூறியாதவது, கடந்தாண்டு
மும்பையில் குடும்பத்துடன் தீபாவளி கொண்டாட்டத்தில் பங்கேற்க முடிந்தது.
இந்தாண்டு, வெள்ளை மாளிகையில் நடக்கும் தீபாவளி நிகழ்ச்சியில் பங்கேற்று,
விளக்கேற்றும் முதல் அதிபர் என்பதில் பெருமையாக உள்ளது, என்றார். கடந்த
வாரம் ஒபாமா வெளியிட்ட தீபாவளி வாழ்த்து செய்தியில் அவர், இந்தியாவில்
தீபாவளி பண்டிகையின் போது குடும்பம், நண்பர்களுடன் சேர்ந்து
கொண்டாடப்படுகிறது. தீபாவளியின் போது சிறப்பு உணவு வகைகளை சாப்பிட்டு,
நடனம் செய்யும் தருணம். அது மட்டுமின்றி ஏழை எளியவர்களை நினைத்து
அவர்களுடன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளும் நேரம் என்று கூறியிருந்தார்.
No comments:
Post a Comment