|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

28 October, 2011

பூமிக்கு நெருங்கி வருவதால் வியாழன் கிரகத்தை நாளை தெளிவாக பார்க்கலாம்!

சூரிய குடும்பத்தில் உள்ள கிரகங்களில் ஜுபிடர் என்று அழைக்கப்படும் வியாழன் கிரகம்தான் மிகப் பெரிய கிரகமாகும். சூரியனை சுற்றும் போது 398.9 நாட்களுக்கு ஒருமுறை சுற்றுப் பாதையில் சூரியனுக்கு நேர் எதிரில் வியாழன் கிரகம் வருகிறது. இப்படிப்பட்ட நிகழ்வு நாளை (29-ந் தேதி) நடந்தேற உள்ளது. பொதுவாக பூமிக்கும் வியாழனுக்கு இடையே உள்ள தூரம் 93 கோடி கி.மீ. ஆகும். ஆனால் சூரியனுக்கு நேர் எதிராக வியாழன் வரும் நிகழ்வின்போது, பூமிக்கும் வியாழனுக்கும் இடையேயுள்ள தூரம் மிகவும் குறைந்து விடுகிறது. இந்த தூரம் 93 கோடி கி.மீ.யில் இருந்து 59.3 கி.மீ.யாக குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.


நேர் எதிரில் வருவதால் வியாழன் மீது சூரிய ஒளி முழுவதும் படுவதாலும், பூமிக்கு அது நெருங்கி வருவதாலும் வியாழன் கிரகத்தை பூமியில் இருந்து தெளிவாக பார்க்க முடியும். சூரிய உதயம் மற்றும் அஸ்தமனம் ஆகிய நேரங்களில் வியாழன் கிரகம் வெளிச்சமாக காணப்படும். 
இந்த நிகழ்வு கடந்த ஆண்டு செப்டம்பர் 21-ந் தேதி நடந்தது. அடுத்ததாக 2012-ம் ஆண்டு டிசம்பர் 3-ந் தேதி மீண்டும் இந்த நிகழ்வு நடக்கும். வானம் தெளிவாக இருந்தால், 28 முதல் 31-ந் தேதி வரை மாலை 6.30 மணியில் இருந்து இரவு 8.30 மணி வரை வியாழன் கிரகத்தை பார்க்க, பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மையத்தில் பிர்லா கோளரங்க நிர்வாகம் ஏற்பாடுகளை செய்யும்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...