இங்கிலாந்து விஞ்ஞானிகள் ஸ்டெம் செல்களில் இருந்து செயற்கை ரத்தத்தை
தயாரித்து புதிய சாதனை படைத்துள்ளனர். இன்னும் 2 ஆண்டுகளில் மனித உடலில்
செலுத்தி சோதிக்கப்படவிருக்கிறது. இந்த செயற்கை ரத்தம் பயன்பாட்டிற்கு வர
10 ஆண்டுகள் ஆகும். நோய்களும், விபத்துகளும் அதிகரித்துள்ள இந்த
காலத்தில் அன்றாடம் அறுவை சிகிச்சைகள் நடந்து கொண்டிருக்கிறது. இதற்கு
ரத்தம் தேவைப்படுகிறது. சில சமயங்களில் போதிய ரத்தம் கிடைக்காததால்
நோயாளிகள் பரிதாபமாக உயிர் இழக்கின்றனர். ரத்த வங்கிகளில் கூட குறிப்பிட்ட
சில குரூப் ரத்தம் இருப்பு இருக்காது. அப்போது ரத்தத்திற்ககாக அலைய
வேண்டியது வரும்.
இனிமேல் அந்த அலைச்சல் எல்லாம் இருக்காது.
இங்கிலாந்து விஞ்ஞானிகள் ஸ்டெம் செல்களில் இருந்து செயற்கை ரத்தத்தை
தயாரி்ததுள்ளனர். இதய மாற்று அறுவை சிகிச்சை, பைபாஸ் சிகிச்சை,
புற்றுநோயாளிகளுக்கு இந்த செயற்கை ரத்தம் ஒரு வரப்பிரசாதமாக இருக்கும்.
செயற்கை ரத்தத்தில் எந்தவித தொற்றுகளும் இருக்காது. அதனால் யாருக்கு
வேண்டும் என்றாலும் தைரியமாக ஏற்றலாம்.
இன்னும் 2 ஆண்டுகளில் ஒரு
டீஸ்பூன் அளவிலான செற்கை ரத்தத்தை மனிதனுக்கு சோதனை அடிப்படையில்
ஏற்றவிருக்கினர். இந்த ரத்தம் பயன்பாட்டிற்கு வர இன்னும் 10 ஆண்டுகள்
ஆகும். இங்கிலாந்தின் எடின்பர்க் மற்றும் பிரிஸ்டல் பல்கலைக்கழக
விஞ்ஞானிகள் ஸ்டெம் செல்களில் இருந்து ஆயிரக்கணக்கான மில்லியன் சிவப்பு
அணுக்களை உருவாக்கி அதை ஆய்வுக்கூடத்தில் வைத்து செயற்கை ரத்தத்தை
தயாரி்ததுள்ளனர்.
No comments:
Post a Comment