சென்னை மாநகரின் போக்குவரத்து நெரிசலை
குறைக்க மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டப்பணிகள்
14 ஆயிரத்து 600 கோடி செலவில் நிறைவேற்றப்படுகிறது. வண்ணாரப்பேட்டையில்
இருந்து மீனம்பாக்கம் விமானம் நிலையம் வரை ஒரு மெட்ரோ ரெயில் பாதையும்,
சென்னை சென்ட்ரலில் இருந்து பரங்கிமலை வரை மற்றொரு பாதையும்
அமைக்கப்படுகிறது. இரண்டு பாதையும் சேர்த்து மொத்தம் 45 கிலோ மீட்டர்
தூரத்திற்கு மெட்ரோ ரெயில் இயக்கப்படுகிறது. வண்ணாரப்பேட்டையில் இருந்து சென்னை விமான நிலையம் வரை அமைக்கப்படும் ரெயில் பாதையில் 14.3 கிலோ மீட்டர் தூரம் சுரங்கப்பாதையாகும்.
இதில்
11 ரெயில் நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. 8.7 கிலோ மீட்டர் தூரத்திற்கு
சாலையின் மேலே ரெயில் பாதை உருவாக்கப்படுகிறது. இதில் 6 ரெயில் நிலையங்கள்
கட்டப்படுகின்றன. சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து
பரங்கிமலை வரையிலான திட்டத்தில் 22 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரெயில்
பாதை அமைக்கப்படுகிறது.
“இதில் சுரங்கப் பாதையாக 9.7 கிலோ
மீட்டரும் வெளிப்புற பாதையாக 12.3 கிலோ மீட்டர் தூரமும் அமைக்கப்படுகிறது.
இந்த பாதையில் 17 ரெயில் நிலையங்கள் இடம் பெறுகின்றன. இதில் 9 ரெயில்
நிலையங்கள் சுரங்கப் பாதையிலும் 8 நிலையங்கள் வெளிப்புற நிலையமாகவும்
அமைக்கப்படுகின்றன. வெளிப்புறமாக சாலையின் மேலே செல்லக்கூடிய
ரெயில் பாதைக்கு தேவையான தூண்கள் எழுப்பப்பட்டுள்ளன. சுரங்க ரெயில் பாதை
அமைக்கப்படும் பணி கடினமானது. அந்த பணிகள் தற்போது தீவிரமாக நடந்து
வருகின்றன. மண் சோதனை ஆய்வுகள் நடக்கின்றன.
சென்ட்ரல் ரெயில்
நிலையம், எழும்பூர் ரெயில்நிலையம் 2-வது நுழைவு வாயில், ஷெனாய்நகர்,
திருமங்கலம் வரையிலும், வண்ணாரப்பேட்டை, மண்ணடி, சென்ட்ரல், தேனாம்பேட்டை,
சைதாப்பேட்டை வரையிலும் சுரங்கப்பாதையில் மெட்ரோ ரெயில் இயக்கப்படுவதால்
அதற்கான நிலையம், பாதை அமைக்கும் பணி அடுத்த கட்டமாக தொடங்க உள்ளது.
சுரங்கப்
பாதையில் ரெயில் நிலையங்கள் அமைப்பதற்கான பணிகள் 2012-ஆம் முதல்
காலாண்டில் (ஜனவரி-மார்ச்) தொடங்கப்படும் என்று மெட்ரோ ரெயில் அதிகாரிகள்
தெரிவித்தனர். இதற்காக சுரங்கம் தோண்டும் எந்திரம் ரஷியாவில்
இருந்து கொண்டு வரப்படுகிறது. டிசம்பர் மாதத்தில் அந்த எந்திரம் வந்து
விடுகிறது. பூமியின் தரை தளத்தில் இருந்து 17 மீட்டருக்கு அடியில் குழி
தோண்டப்படுகிறது. இரண்டு பக்கமும் குழி தோண்டி கான்கிரீட் சுவர்
எழுப்பப்படும். அதன் வழியாக சுரங்கம் தோண்டும் எந்திரத்தை கொண்டு சென்று
தேவையான அளவிற்கு ஆழம், அகலம் செய்யப்படும்.
ஒவ்வொரு சுரங்க
ரெயில் பாதை தனித்தனி ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதனால்
அந்தந்த ஒப்பந்ததாரர்கள் இந்த பணியை தனித்தனியே செய்கிறார்கள்.சுரங்க ரெயில் நிலையம் அமைக்கும் பணி எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து
முதலில் தொடங்குகிறது. மெட்ரோ ரெயில் பாதை இருவழிப்பாதையாக
அமைக்கப்படுகிறது. ஒரு பாதையில் போகவும், மற்றொரு பாதையில் வரவும் பாதை
உருவாக்கப்படுகிறது. இதனால் இருபுறமும் ரெயிலில் ஏறி இறங்க பிளாட்பாரம்
வசதி, நிலையங்கள் கட்டப்பட உள்ளன. மெட்ரோ ரெயிலில் குறைந்தது 4
பெட்டிகள் அதிகபட்சமாக 6 பெட்டிகள் வரை இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
2009-ல் தொடங்கப்பட்ட மெட்ரோ ரெயில் பணி 2015-ம் ஆண்டுக்குள் நிறைவடைய
வேண்டும்
No comments:
Post a Comment