தமிழகத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி 2 நாட்களில் மட்டும் 160 கோடி ரூபாய் மதிப்பிலான மதுபான வகைகள் விற்பனையாகி உள்ளது.தீபாவளி
பண்டிக்கை கடந்த 2 நாட்களாக சிறப்பாக கொண்டாடப்பட்டது. பண்டிகை நாட்களில்
மதுவகைகளை உட்கொள்ளும் பழக்கம் இளைஞர்களிடையே வழக்கம். இதனால் டாஸ்மாக்
கடைகளில் பண்டிகை நாட்களில் மதுவகைகளுக்கு தட்டுபாடு ஏற்படுவது உண்டு. இதை
தவிர்க்க தீபாவளி பண்டிகைக்காக தமிழகம் முழுவதும் உள்ள 6,696 டாஸ்மாக்
கடைகளில் அதிகளவிலான மதுபாட்டிகள் விற்பனைக்காக தயார் நிலையில்
வைக்கப்பட்டிருந்தது. தீபாவளி பண்டிகை விற்பனைக்காக ஐஎம்எப்எல், பீர்,
ஒயின் மதுபானங்கள், டாஸ்மாக் குடோன்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த
நிலையில் கடந்த 25 மற்றும் 26ம் தேதி மட்டும், அயல்நாட்டு மதுபானங்கள்
2,30,000 கேஸ்கள் விற்பனையாகி உள்ளன. பீர் வகைகள் 1,70,000 கேஸ்கள்
விற்பனையானது.
இதன்மூலம் மொத்தம் 160 கோடி ரூபாய் வருமானம்
கிடைத்துள்ளது. இதில் சென்னையில் உள்ள 441 கடைகளில் மட்டும் 19 கோடியே 18
லட்சம் ரூபாய் மதிப்பிலான மது வகைகள் விற்பனையாகி உள்ளது. இதன்மூலம்
கடந்தாண்டை விட 58 கோடி ரூபாய் மதுபானங்கள் கூடுதலாக விற்பனையாகி உள்ளது.
மேலும் இந்தாண்டு 150 கோடி ரூபாய் விற்பனை செய்ய நிர்ணயிக்கப்பட்டிருந்தது
குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment