|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

01 December, 2011

இலங்கையில் தமிழ் மாணவன் 85 சதவீத மதிப்பெண் எடுத்தால்தான் தேர்ச்சி !

இலங்கையில் தமிழ் மாணவர்கள் 85 சதவீத மதிப்பெண்கள் எடுத்தால்தான் தேர்ச்சி பெற முடியும் நிலை உள்ளதாக நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் தெரிவித்தார். நாமக்கல்லில் நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வு கூட்டம் நளா அரங்கில் நடந்தது. கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது: ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தஞ்சை பெரிய கோவிலை ராஜராஜசோழன் கட்டினார். கரிகாலன் கல்லணையை கட்டினார். திருவள்ளூவர் திருக்குறளை இயற்றினார். இதுபோன்று தமிழர்கள் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தினர். இலங்கை ராணுவத்தில் ஒரு தமிழர்கூட இல்லை. அப்படியானால் அவர்கள் தமிழர்களுக்கு எப்படி பாதுகாப்பு கொடுப்பார்கள் என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும். இலங்கையில் சிங்கள மாணவர்கள் 35 மதிப்பெண்கள் எடுத்தால் தேர்வில் வெற்றி பெறலாம். ஆனால் தமிழ் சமுதாயத்தை சேர்ந்த மாணவன் 85 சதவீத மதிப்பெண் எடுத்தால்தான் தேர்ச்சி பெற முடியும்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...