|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

01 December, 2011

மன்னிக்கும் மனப்பான்மை மன அழுத்தத்தை போக்கும்...


மனிதனுக்கு வரும் நோய்களில் 75 முதல் 90 வரை நோய்கள் அழுத்தமான சூழல் காரணமாக வருபவை என்று சமீபத்திய ஆராய்ச்சி ஒன்று அதிர்ச்சித் தகவல் சொல்லியிருக்கிறது.எண்ணற்ற நோய்களின் பிறப்பிடமாக உள்ள மனஅழுத்தம் மண வாழ்க்கையிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. மன அழுத்தத்தினால் எற்படும் பிரச்சினைகள் உறவுகளில் விரிசலை ஏற்படுத்திவிடும் எனவே மன அழுத்தத்தில் இருந்து வாழ்க்கையை பாதுகாக்க சில வழிமுறைகள் 

தேவையற்ற விவாதம் வேண்டாம் மன அழுத்தம் ஏற்படுத்தும் சில சூழல்கள் வீட்டிற்கு வெளியில் இருந்து ஏற்படுகிறது. அதனை அப்படியே வெளியே விட்டு விட வேண்டும். வீட்டிற்குள் கொண்டு வந்து தேவையில்லாமல் அதை விவாதிக்க கூடாது. மன அழுத்தம் ஏற்படுத்தும் சூழல்களை சமாளிக்கப் பழகவேண்டும். தேவையில்லாமல் காட்டு கத்தல் கத்தி துணையை அச்சுறுத்தக்கூடாது.

தனிமையை நாடுங்கள் மனஅழுத்தமான சூழலில் தனிமையை நாடுவது நல்லது. அது தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படுவதை தடுக்கும். உங்கள் துணைக்கும் நீங்கள் ஏன் டிஸ்டென்ஸ் மெய்ன்டெய்ன் செய்கிறீர்கள் என்று தெரியும்.வார இறுதிகள், விடுமுறை நாட்களை மிகச் சிறப்பாகச் செலவிடுங்கள். வெளியே செல்வது, கடற்கரைக்குச் செல்வது என மனதை புத்துணர்ச்சியாக்குங்கள்.

உறவுகளிடம் கேளுங்கள் உங்கள் உறவுகளுடன் இனிய சூழலை கடைபிடியுங்கள். உங்களுக்கு ஏற்பட்ட மன அழுத்தத்தை உறவுகள் மீது திணிக்காதீர்கள். உங்களின் மன அழுத்தம் உறவுகளுக்கும் பாதிப்பபை ஏற்படுத்தும் எனவே மனதை லேசாக்கி உறவுகளை உற்சாகப்படுத்துங்கள். மன அழுத்தமான சூழ்நிலையில் உங்களின் நடவடிக்கைகள் உங்கள் உறவுகளை எவ்வாறு பாதிக்கிறது என்று கேளுங்கள்.

கவலைக்கு முற்றுப்புள்ளி கவலைதான் மன அழுத்தத்தின் ஊற்றுக்கண். எனவே கவலைக்கு கட்டுப்பாடு போடுங்கள். கவலை ஏற்படுவதை கட்டுப்படுத்துவது உங்கள் கையில்தான் இருக்கிறது. உணர்ச்சிகளை கட்டுப்படுத்துங்கள் உங்கள் உணர்ச்சிகளை கட்டுப்படுத்துங்கள். அது தானாக உங்கள் மன அழுத்தத்தை கட்டுப்படுத்தும்.

வளைந்து கொடுங்கள் எதற்குமே வளைந்து கொடுக்காமல் இருப்பதுதான் மன அழுத்தத்திற்கு காரணமாக கூறப்படுகிறது. ஒரு சில விசயங்களில் நாணலைப்போல வளைந்து கொடுத்தால் மன அழுத்தம் ஏற்பட வாய்ப்பே இல்லை என்கின்றனர் உளவியலாளர்கள். 

மன்னிக்கும் மனப்பான்மை என்னை யாரும் புரிந்துகொள்ளவில்லையே எனும் முனகல்களைத் தவிர்த்து பிறரைப் புரிந்து கொள்ள முயலுங்கள். மன்னிக்கும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள், அடுத்தவர்களைக் காயப்படுத்தாமல் வாழப் பழகுங்கள்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...